Maari : டம்மியான தாராவின் திட்டம்.. அசிங்கப்பட்ட ஜாஸ்மின்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Maari : டம்மியான தாராவின் திட்டம்.. அசிங்கப்பட்ட ஜாஸ்மின்!

Maari : டம்மியான தாராவின் திட்டம்.. அசிங்கப்பட்ட ஜாஸ்மின்!

Divya Sekar HT Tamil
Jun 09, 2023 03:20 PM IST

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து இதில் காண்போம்.

மாரி
மாரி

ஜெகதீஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

டாக்டர் ஜெகதீசுக்கு தலையில் ரத்தக்கசிவு இருப்பதாக சொன்ன நிலையில் தினேஷ் ஹார்ட் அட்டாக்குனு வந்தவருக்கு ரத்தக்கசிவு எப்படி இருக்கும் என டாக்டருடன் சண்டை போட்டுக் கொண்டிருக்க சூர்யாவும் அங்கு வந்து என்ன விஷயம் என கேட்டு பிறகு அவனும் டாக்டருடன் வாக்குவாதம் செய்ய இதை பார்த்த தாரா இது தப்பான டிராக்ல போது உடனடியாக தடுத்து நிறுத்தனும் என யோசிக்கிறாள்.

அதன் பிறகு அங்கு வரும் தாரா சூர்யா மற்றும் தினேஷை தடுத்து நிறுத்தி அப்பாவோட உயிரை காப்பாற்றிய டாக்டர் கிட்ட இப்படியா பேசுவீங்க என பேச்சை மாற்றி விடுகிறாள். சங்கர பாண்டி மாத்திரை கொடுத்த பார்மசிக்கு போன் செய்து செத்துப் போயிடுவார் என்று மாத்திரை கொடுத்தீங்க ஆனா அவர் நல்லா தான் இருக்காரு என்ன மாத்திரை கொடுத்தீங்க என சத்தம் போடுகிறான்.

பிறகு டாக்டர் சூர்யாவை அழைத்து ஜெகதீஷ்க்கு பெருசா ஏதும் பிரச்சனை இல்ல வீட்டில் வைத்தே ட்ரீட்மெண்ட் எடுத்துக்கலாம் என சொல்கிறார். மேலும் அப்பாவை தினேஷ் பார்த்துக்கட்டும் என சூர்யா சொல்ல மாரி தாராவை பார்த்து இல்ல வேண்டாம், எனக்கு பயமா இருக்கு நானே மாமாவை பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறாள்.

இன்னொரு பக்கம் ஜெயிலில் கங்காதரன் என்பவர் தாராவால் 16 வருஷம் ஜெயிலில் இருக்கிறேன் வெளியே போனதும் அவளை பழிவாங்க வேண்டும் என சொல்லிக் கொண்டிருக்க போலீசார் ஒருவர் வந்து நாளைக்கு உனக்கு விடுதலை என சொல்கிறார். இந்த விஷயம் அறியும் சங்கர பாண்டி வேகமாக ஓடி வந்து தாராவிடம் கங்காதரன் ரிலீசாகும் தகவலை சொல்ல அவள் அதிர்ச்சி அடைகிறாள்.

அடுத்ததாக மாரி எல்லா வேலைகளையும் செய்து கை வலியால் தவிக்க சூர்யா அவளுக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறான். பிறகு மாத்திரைகளை எடுத்துக் கொடுக்க மாரி இவ்வளவு மாத்திரைகளை எப்படி சாப்பிடுவது ஹஸ்பண்ட் சார் என கேட்க சூர்யா ஒவ்வொரு மாத்திரையாக போட்டு சக்கரையை வாயில் போடுகிறான்.

மேலும் சிறுவயதில் தனக்கு தேவி அம்மா இப்படித்தான் மாத்திரை கொடுப்பார் என்ற விஷயத்தையும் சொல்கிறான். இதையெல்லாம் ஜாஸ்மின் ஜன்னல் வழியாக பார்த்து கடுப்பாக இதைப் பார்த்து ஹாசினி அவளை கூப்பிட்டு உன்னால என்னைக்கும் சூர்யா மாமாவை கல்யாணம் பண்ண முடியாது, வேற வேலைய பார்த்துகிட்டு கிளம்பு என மிரட்டுகிறாள்.

அது மட்டுமல்லாமல் இப்படி அடுத்தவங்க ரூமை எட்டி பாக்குறது மிகப்பெரிய அசிங்கம் என ஜாஸ்மினை அவமானப்படுத்துகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய மாறி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.