HBD Sadhana Sargam: மெல்லிசை புயல்… சங்கீத குயில்… சாதனா சர்கம்…
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Sadhana Sargam: மெல்லிசை புயல்… சங்கீத குயில்… சாதனா சர்கம்…

HBD Sadhana Sargam: மெல்லிசை புயல்… சங்கீத குயில்… சாதனா சர்கம்…

Priyadarshini R HT Tamil
Mar 07, 2023 06:30 AM IST

Singer Sadhana Sargam: மெலடி பாடல்களுக்கு தனது இனிமையான மெல்லிய குரலால் கூடுதல் மெருகூட்டும் உணர்ச்சி மிகுந்த குரலுக்கு சொந்தக்காரர். இந்தியாவின் பல மொழிகளிலும் பாடி, ரசிகர்களை கவர்ந்தவர். பாடகி சாதனா சர்கத்தின் பிறந்த நாள் இன்று. அவருடைய பிறந்த நாளில் அவர் பற்றி தெரிந்துகொள்வோம்.

பாடகி சாதனா சர்கம் - கோப்புப்படம்.
பாடகி சாதனா சர்கம் - கோப்புப்படம்.

ஒரு காதலோ, காதல் தோல்வியோ, காதல் வாட்டும் தனிமையோ, காதல் பிரவோ, காதல் விரக்தியோ எந்த உணர்வானாலும் உங்கள் போனிலோ அல்லது மற்ற டிவைசில் சாதனா சர்கம் பாடல்களை ப்ளே லிஸ்டில் ஓடவிட்டு இந்த அனைத்து உணர்வுகளையும் மாறி மாறி ரசிக்க முடியும். அவரது குரலுக்கு அவ்வளவு வீரியம் உண்டு.  

இவர் தமிழில் மட்டும் பாடி உங்கள் ஏக்கத்திற்கும், தூக்கத்திற்கும் காரணமாக இருந்தவர் மட்டுமல்ல, இந்தி, பெங்காலி, நேபாளி, தெலுங்கு என பரவலாக இந்திய மக்கள் அனைவரையும் அரவனைத்தவர் என்றே கூறலாம். இத்தனை மொழிகளில் பாடியதால் தேசிய விருது, பல்வேறு மாநில விருதுகள் மற்றும் பிலிம்பேர் விருதுகளை பெற்றவர். மஹாராஷ்ட்ராவில் உள்ள தாபோலில் ஒரு இசைக்குடும்பத்தில் பிறந்தவர். இவர் பிறந்தது ஒரு சிறிய துறைமுக நகரமாகும். இவரது தாய் நீலா கனேகர், இசை ஆசிரியை மற்றும் பாடகர். எனவே மீன் குஞ்சுக்கு நீந்தவா கற்றுக்கொடுக்க வேண்டும். சாதனா சர்கம் இயற்கையிலே பாடும் ஆற்றல் பெற்றிருந்தார். சாதனா சர்கம் முதலில் குழந்தைகள் கோரசில் பாடினார். பின்னர் தனது 6 வயதில் தூர்தர்ஷனில் ஏன் அனக் அவுர் ஏக்தா என்ற பிரபல இந்தி பாடலை பாடினார். அந்த நினைவுகளை பகிர்ந்துகொள்ளும்போது சர்கம், ‘எனது பெற்றோர் அந்த ரெக்கார்டிங் அழைத்துச்சென்று பாடவைத்தனர். எனக்கு அந்த சம்பவம் அவ்வளவாக நினைவில்லை“ என்கிறார். மும்பை கேரோகான்கர் ஆங்கில பள்ளியில் படித்தார். பள்ளிக்காலத்தில் இருந்தே பாட துவங்கிவிட்டார் சாதனா சர்கம். 

சாதனா சர்கம், குஜராத்தி மொழியில் கங்கு பக்லி என்ற படத்தில் தனது முதல் பாடலை பாடினார். அவரது முதல் இந்தி பாடல் தனிப்பாடலாக அமைந்தது. ரஷ்டம் படத்தில் அவர் பாடிய தூர் நஹின் ரெஹ்னா என்ற பாடல்தான் அது. ஆனால் முதலில் வெளியான பாடல் அவர் விதாத்தா படத்திற்காக பாடிய சாத் சஹேலியன் என்ற பாடல்தான். பின்னர் அவர் தொடர்ந்து பல்வேறு மொழி சினிமாக்களில் பாடி வந்தார். 200க்கும் மேற்பட்ட பாடல்களை தமிழில் பாடியுள்ளார். 

அதுமட்டுமின்றி இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, அசாமி, பெங்காலி, குஜராத்தி, நேபாளி, ஒடியா, கன்னடம் மற்றும் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தென்னிந்தியாவில் பிறக்காமல் தென்னிந்திய பாடல்களுக்கு இரு தேசிய விருது பெற்ற முதல் பாடகர் சாதனா சர்கம் ஆவார். திரை இசை பாடல்கள் மட்டுமல்ல, பக்தி பாடல்களும் பாடியுள்ளார். இவர் சர்வதேச அளவிலும் பாடல்களை பாடியுள்ளார். லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே, சித்ரா, ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, அமிதாப்பச்சன் என திரைப்பிரபலங்களுக்கே பிடித்தது இவரது குரல். இன்று பிறந்த நாள் கொண்டாடும் சாதனா சர்கம் வாழ்வில் எல்லா நலன்களும், வளமும் பெற்ற வாழ வேண்டும் என்று ஹெச்டி தமிழ் அவரை வாழ்த்துகிறது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.