தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Madhuri Dixit : எல்லோரையும் கொண்டாடும் தமிழ் திரைபட உலகம் மாதுரி தீட்சித்தை மிஸ் பண்ணியதற்கான காரணம் தெரியுமா?

HBD Madhuri Dixit : எல்லோரையும் கொண்டாடும் தமிழ் திரைபட உலகம் மாதுரி தீட்சித்தை மிஸ் பண்ணியதற்கான காரணம் தெரியுமா?

Pandeeswari Gurusamy HT Tamil
May 15, 2024 05:30 AM IST

HBD Madhuri Dixit : தமிழ் திரைப்பட உலகம் இது வரை கண்டிராத அளவுக்கு எல்லோரும் மூக்கில் விரல் வைத்து வியக்கும் வகையில் பிரமாண்டமான அழைப்பிதழ் அடித்து தயாரான படம். இந்தி தவிர வேறு எந்த மொழியிலும் நடிக்காத மாதுரி இந்த கதையை கேட்டு ஈர்ப்பாகி தமிழுக்கு நடிக்க வந்தார்.

எல்லோரையும் கொண்டாடும் தமிழ் திரைப்பட உலகம் மாதுரி தீட்சித்தை எப்படி மிஸ் பண்ணிட்டாங்க!
எல்லோரையும் கொண்டாடும் தமிழ் திரைப்பட உலகம் மாதுரி தீட்சித்தை எப்படி மிஸ் பண்ணிட்டாங்க! (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

பல பிரபல பத்திரிகைகளில் அட்டை பக்கத்தை அதிக முறை ஆக்கிரமித்தவர். இவர் நடித்த படங்கள் எல்லாம் வசூலை அள்ளிக் கொண்டு சென்றது. அழுத்தமான கதாபாத்திரங்களில் அலட்சியமாக நடித்தார். இவர் தேதிக்கான முன்னணி நடிகர்கள் காத்திருக்கும் காலம் உருவானது என்றே சொல்லலாம். திருமணத்திற்க்கு பின்னர் திரைப்படங்களை குறைத்து கொண்டார்.

ஆறு முறை ஃபிலிம்ஃபேர் விருதுகள் இவரது நடிப்பு திறமைக்காக கிடைத்தது. இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இவர் கலிபோர்னியா சேர்ந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராம் மாதவ் நேனேவை திருமணம் செய்தார். அவருடைய திருமணம் 1999 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவில் எளிமையாக நடந்த போதிலும் மும்பையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய அரசியல் பிரபலங்கள் முதல் திரைப்பட நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்று வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

ஆன்லைனில் நடனம்

 திருமணம் முடிந்து வெளிநாட்டில் தங்கியிருந்த அவர் இரு குழந்தைகளின் தாய் ஆனார். 2011 ல் மீண்டும் மும்பை வந்தார். மேடை நிகழ்ச்சி லைவ் கச்சேரிகள் செய்துள்ளார். டான்ஸ் வித் மாதுரி என்ற பெயரில் நடனம் ஆன்லைன் மூலம் கற்றுக் கொடுக்கிறார்.

இவருடைய சில படங்களில் இடம்பெற்ற பாடல்களில் சிறு பகுதிகள் பாடியிருக்கிறார். இவர் இந்த அனுபவத்தில் இருந்து நேரடியாக இசை நிகழ்ச்சிகள் நடத்த அவருக்கு உதவியது. அவர் அம்மாவோடு சேர்ந்து பாரம்பரிய நாட்டுப்புற பாடல்கள் அதிக அளவில் பாடியுள்ளார். 2020 ல் தனது அறிமுகப் பாடலை கொரோனா தொற்று நோயை எதிர்த்து போராடிய முன்னணி ஊழியர்களுக்கு ஆதரவாக மெழுகுவர்த்தி என்ற தனி இசை ஆல்பம் வெளியிட்டார். 2022ல் தூ ஹை மேரா என்ற இரண்டாவது முறையாக இசை ஆல்பம் வெளியிட்டார்.

இவர் பாலிவுட்டில் பிரபலமான நடிகை என்பதையும் தாண்டி சிறந்த சமூக செயற்பாட்டாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடரில் நடித்துக் கொடுத்தார். 2002 ல் நடைபெற்ற குரோர்பதி என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்று வென்ற பெரிய பரிசுத்தொகையை குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடையாக வழங்கினார். 

குழந்தைகள் கல்வி, பெண்கள் மேம்பாடு என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு செய்து வருகின்றார். அனாதை குழந்தைகளுக்கு பெரிய அளவில் உதவி வருகிறார். யாரை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் பாதுகாப்புக்காக உழைத்து வருகிறார். யுனிசெப் உடன் இணைந்து குழந்தைகள் நலனுக்காக பாடுபட்டு வருகிறார்.

தமிழ் திரைப்பட உலகம் தவற விட்ட கதை

இதெல்லாம் சரிங்க. இவ்வளவு பெரிய ஆளை தமிழ் திரைப்பட உலகம் எப்படி பயன்படுத்தாமல் விட்டது என்று நீங்கள் கேட்பதற்கான விடையை மூத்த பத்திரிகையாளர் வி.கே.சுந்தர் தனது பெயரில் நடத்தி வரும் வி.கே.சுந்தர் அப்டேட்ஸ் என்ற யூடியூப் சேனலில் தெரிவித்து உள்ளார். 

பாலிவுட்டில் கொடி கட்டிப் பறந்த நடிகை இந்தி மொழி தவிர்த்து வேறு எந்த மொழியிலும் நடிக்காத மாதுரி தீட்சித்தை தமிழ் திரைப்பட உலகம் நடிக்க வைத்து இருக்கிறது. இயக்குநர் சங்கர் அவர்களின் அசோசியேட் டைரக்டர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் உருவான படம்.

அரவிந்த் சாமி ஹீரோ வாக நடித்து மாதுரி தீட்சித் ஹீரோயின் ஆக நடித்தார். இசை ஏ.ஆர். ரகுமான். ஒளிப்பதிவு ஜீவா. கலை தோட்டா தரணி என்று ஜாம்பவான்கள் பணியாற்றினர். தமிழ் திரைப்பட உலகம் இது வரை கண்டிராத அளவுக்கு எல்லோரும் மூக்கில் விரல் வைத்து வியக்கும் வகையில் பிரமாண்டமான அழைப்பிதழ் அடித்து தயாரான படம். 

இந்தி தவிர வேறு எந்த மொழியிலும் நடிக்காத மாதுரி இந்த கதையை கேட்டு ஈர்ப்பாகி தமிழுக்கு நடிக்க வந்தவர். நீர்த்தேக்கத்தை மையமாக கொண்டு அமைக்கப்பட்ட கதை. ஆனால் அந்த திரைப்படம் நிதிப்பற்றாக்குறை காரணமாக வெளிவராமல் போனது தான் வருத்தமான செய்தி. என்று தெரிவித்துள்ளார்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்