HBD Fahaad Fazil : 'இவரு ஹீரோவா?' கேலி செய்தவர்களை காலி செய்த ஃபகத் ஃபாசில்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Fahaad Fazil : 'இவரு ஹீரோவா?' கேலி செய்தவர்களை காலி செய்த ஃபகத் ஃபாசில்!

HBD Fahaad Fazil : 'இவரு ஹீரோவா?' கேலி செய்தவர்களை காலி செய்த ஃபகத் ஃபாசில்!

Priyadarshini R HT Tamil
Aug 08, 2023 05:00 AM IST

HBD Fahaad Fazil : 1982ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி பிறந்தவர் ஃபகத் ஃபாசில், திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர். மலையாளப்படங்களில் அதிகமும், ஓரிரு, தெலுங்கு, தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் தேசிய விருது மற்றும் கேரள மாநில விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஃபகத் ஃபாசில்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஃபகத் ஃபாசில்

முதலில் திரையிலும் பின்னர் ஓடிடியிலும் வெளியானது. திரையில் வெளியாகி பல்வேறு விமர்சனங்களை பெற்றது. ஓடிடியில் வெளியான பின்னர், ரத்னவேலு கதாபாத்திரம் வைரலாக துவங்கிவிட்டது. இந்தப்படத்தில் அவரது மனைவி கதாபாத்திரம் ஜோதிக்கு ஒரு வசனம் கூட இல்லாவிட்டாலும், அந்த கதாபாத்திரமும், வைரலாகி அவர்கள் இருவர் கதாபாத்திரமும் பெரும் வரவேற்பை பெற்றது.

ரத்னவேலு கதாபாத்திரம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் ஃபகத்தின் நடிப்பை குறைத்து கூறி விட முடியாது. பக்கா வில்லான மாஸ் காட்டிய ஃபகத் ஃபாசில் உண்மையில் சரியான வில்லான வாழ்ந்திருப்பார். அதற்கு மற்ற கதாபாத்திரங்களும் இடம் கொடுத்திருக்கும். உதயநிதியோ அல்லது வடிவேலுவோ ஹீரோவாக மாஸ் கட்ட மெனக்கெட்டிருக்க மாட்டார்கள். தங்களின் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருப்பார்கள். அதனால், சிறந்த வில்லனாக கொண்டாடப்பட்டார் ஃபகத்.

1982ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி பிறந்தவர் ஃபகத் ஃபாசில், திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர். மலையாளப்படங்களில் அதிகமும், ஓரிரு, தெலுங்கு, தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் தேசிய விருது மற்றும் கேரள மாநில விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார். இவர் பிரபல மலையாள இயக்குனர் ஃபாசிலின் மகன் ஆவார். ஃபகத் துவக்கத்தில் மிகச்சுமாரான நடிகராக இருந்துள்ளார்.

அதனால் இயக்குனரின் மகனாக இருந்துகொண்டு இப்படி நடிக்கிறாரே என்று விமர்சனம் செய்தார்கள். ஆனால், நான் நன்றாக நடிக்காதது என் தவறு, அதற்கு என் தந்தையை குறை கூறவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதுடன். படிப்பதற்காக அமெரிக்கா சென்று திரும்பி வந்து நடித்த படங்கள் எல்லாம் ஹிட் அடிக்கிறது.

கையேதும் தூரத்து படத்தில் இவர் அறிமுகமானபோதுதான் இவர் நடிக்கவே லாயக்கில்லை என்று விமர்சிக்கப்பட்டார். நஸ்ரியாவை திருமணம் செய்தபோதும் வயது வித்யாசத்துக்காக கேலி செய்யப்பட்டவர். இவருக்கு தலையில் முடி குறைவாக இருப்பதால் உருவகேலிக்கு ஆளானவர் என பல்வேறு தடைகளையும் கடந்து, இன்று தனது திறமையால் வெற்றி பெற்றுள்ளார். உண்மையான திறமையாளிகளை மக்கள் கொண்டாடவும் செய்துள்ளனர். ஃபகத் ஃபாசிலை அவரது ரசிகர்கள் செல்லமாக ஃபா ஃபா என்று அழைக்கிறார்கள்.

தமிழில் வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்திருப்பார். அப்போது முதல் இவரை தமிழ் ரசிகர்கள் ஃபாஃபா என்று கொண்டாட துவங்கிவிட்டார்கள். இன்று சமூக வலைதளங்களை திறந்தாலே தற்போது அவரது மீம்கள், அவரது ட்ரால்கள் தான். எந்த விமர்சனத்தையும் பொருட்படுத்தாமல் தனிவழியில் சென்று கொண்டிருக்கும் ஃபகத் ஃபாசில் எல்லா வளங்களும், நலன்களும் பெற்று வாழ ஹெச்.டி தமிழ் வாழ்த்துகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.