Govinda: எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்து..துப்பாக்கி குண்டு அடிபட்ட கோவிந்தா! 10 தையல்கள், இரண்டு நாள்களில் டிஸ்சார்ஜ்-govinda doctor says he got 8 10 stitches likely to be discharged in two days - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Govinda: எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்து..துப்பாக்கி குண்டு அடிபட்ட கோவிந்தா! 10 தையல்கள், இரண்டு நாள்களில் டிஸ்சார்ஜ்

Govinda: எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்து..துப்பாக்கி குண்டு அடிபட்ட கோவிந்தா! 10 தையல்கள், இரண்டு நாள்களில் டிஸ்சார்ஜ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Oct 01, 2024 06:15 PM IST

கோவிந்தாவின் ​​முழங்காலுக்கு இரண்டு இன்ச் கீழே காயம் ஏற்பட்டிருப்பதாகவும், தற்போது 8 முதல் 10 தையல்கள் அவருக்கு போடப்பட்டிருக்கிறது. எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்தில் துப்பாக்கி குண்டு அடிபட்ட கோவிந்த இன்னும் இரண்டு நாள்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.

Govinda: எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்து..துப்பாக்கி குண்டு அடிபட்ட கோவிந்தா! 10 தையல்கள், இரண்டு நாள்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல். அப்பாவை பார்க்க மருத்துவமனை வந்த கோவிந்தா மகள் டினா அஹுஜா
Govinda: எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்து..துப்பாக்கி குண்டு அடிபட்ட கோவிந்தா! 10 தையல்கள், இரண்டு நாள்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல். அப்பாவை பார்க்க மருத்துவமனை வந்த கோவிந்தா மகள் டினா அஹுஜா

துப்பாக்கி குண்டு பாய்ந்து விபத்து

நடிகர் கோவிந்த நிகழ்ச்சிக்காக ஒன்றில் கலந்து கொள்வதற்காக கொல்கத்தாவுக்கு காலை 6 மணிக்கு விமானத்தைப் பிடிக்க வீட்டிலிருந்து புறப்பட்டார். அப்போது அவர் உரிமம் பெற்று வைத்திருந்த ரிவால்வர், அலமாரியில் வைத்திருந்த போது எதிர்பாராத விதமாக ட்ரிக்கர் ஆகி சுடப்பட்டது. இதில் ஒரு குண்டு அவரது காலில் தாக்கியது.

அதிகாலை 4.45 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக அவரது மேலாளர் ஷஷி சின்ஹா ​​தெரிவித்தார்.

மருத்துவமனையில் அனுமதி

இதையடுத்து மும்பையில் உள்ள க்ரிட்டி கேர் மருத்துவமனையில் கோவிந்தாவின் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை அளித்த டாக்டர் அகர்வால், நடிகரின் உடல்நலம் குறித்த அப்டேட்டை தெரிவித்தார். கோவிந்தாவின் மகள் டினா அஹுஜாவும் தனது தந்தையை மருத்துவமனைக்குச் சென்று பார்த்தார்.

கோவிந்தாவின் உடல்நிலை அப்டேட்

டாக்டர் அகர்வால் ஊடகங்களிடம் கூறுகையில், "கோவிந்தா நன்றாக இருக்கிறார் என்றும், அவருக்கு 8-10 தையல்கள் போடப்பட்டது. அதிகபட்சம் இரண்டு நாள்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். 

மூட்டுக்கு கீழே இரண்டு இன்ச்சில் கோவிந்தாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் மருத்துவ கவனிப்பில் இருக்கிறார்" என்றார்.

தந்தைய சந்திக்க சென்ற டினா அஹுஜா 

கோவிந்தாவின் மகள் காயமடைந்த தனது தந்தையை காண மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவமனைக்கு வெளியே டினா இருக்கும் பல விடியோக்கள் மற்றும் படங்கள் சமூக ஊடக தளங்களில் வெளியாகியுள்ளன. ஒரு பாப்பராசி பகிர்ந்துள்ள வீடியோவில், டினா, இளஞ்சிவப்பு உடையில், பொருத்தமான தொப்பி மற்றும் கருமையான சன்கிளாஸ்கள் அணிந்து, காரில் அமர்ந்திருந்த டினா, ஊடகங்களிடம் எதுவும் பேசாமல் தனது தந்தையை மருத்துவமனையில் பார்த்துவிட்ட சென்றுள்ளார். 

முன்னதாக, கோவிந்தாவின் மருமகள் காஷ்மேரா ஷாவும் அவரை மருத்துவமனைக்குச் சென்று சந்தித்தார்.  மும்பையில் விமான நிலையத்துக்கு செல்லவிருந்த கோவிந்தாவின் ரிவால்வர் தற்செயலாக செயல்பட்டதன் விளைவால் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.

கோவிந்தா ஆடியோ பகிர்வு

நடிகர் கோவிந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, தனது உடல் நிலை நன்றாக இருப்பதாக ஆடியோ மெசேஜ் பகிர்ந்தார். அதில், "எனது ரசிகர்கள், எனது பெற்றோர் மற்றும் கடவுளின் ஆசீர்வாதத்துடன், நான் இப்போது சிறப்பாக செயல்படுகிறேன். 

நான் ஒரு தோட்டாவால் தாக்கப்பட்டேன், அது இப்போது அகற்றப்பட்டுள்ளது. இங்குள்ள மருத்துவர் டாக்டர் அகர்வால் ஜிக்கு நான் நன்றி கூறுகிறேன். உங்கள் பிரார்த்தனைகளுக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி" என்று கூறினார்.

கோவிந்தா படங்கள்

1985களில் இருந்து பாலிவுட் சினிமாவில் நடித்திருக்கும் கோவிந்தா, இதுவரை 130க்கும் மேற்பட்ட தமிழில் நடித்துள்ளார். தமிழில் ரம்பா, ஜோதிகா, லைலா ஆகியோர் நடித்த த்ரீ ரோஸஸ் படத்தில் கேமியோ கதாபாத்திரித்தில் நடித்திருப்பார் கோவிந்தா.

நடிப்பதுடன், தனது நடனத்துக்கும் பெயர் பெற்றவராக இருந்து வரும் கோவிந்தா, வித்தியாசமான ஸ்டப்களால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

2004 தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து 2024இல் நாடளுமன்ற தேர்தல் தொடங்குவதற்கு முன்னர் சிவசேனா கட்சியில் இணைந்தார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.