Archana: அழுவதை தவிர அர்ச்சனா என்ன செய்தார்? - டைட்டில் வின்னர் மேல் கடுப்பான கானா பாலா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Archana: அழுவதை தவிர அர்ச்சனா என்ன செய்தார்? - டைட்டில் வின்னர் மேல் கடுப்பான கானா பாலா

Archana: அழுவதை தவிர அர்ச்சனா என்ன செய்தார்? - டைட்டில் வின்னர் மேல் கடுப்பான கானா பாலா

Aarthi Balaji HT Tamil
Jan 20, 2024 03:30 PM IST

அர்ச்சனா குறித்து கானா பாலா கருத்து ஒன்றை தெரிவித்து உள்ளார்.

அர்ச்சனா - கானா பாலா
அர்ச்சனா - கானா பாலா

பிக் பாஸ் தமிழ் 7 இல் அர்ச்சனா தனது வலுவான விளையாட்டின் மூலம் மில்லியன் கணக்கான இதயங்களை வென்றார். உண்மையில், பிக் பாஸ் தமிழ் 7 இல் அர்ச்சனா வெற்றி பெற்றார் என்ற செய்திகள் இறுதிப் போட்டிக்கு கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்பே சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கின.

பிக்பாஸ் சீசன் முடிந்தாலும், அதில் பங்கேற்று வெளியில் வந்தவர்களின் அலப்பறை இன்னும் முடியவில்லை. டைட்டில் வென்ற அர்ச்சனா எந்த ஒரு பதிவும் வெளியிடாமல் மவுனமாக இருந்த நிலையில் மற்ற போட்டியாளர்கள் தான் அலப்பறை செய்து வருகிறார்கள்.

இதனிடையே அர்ச்சனா குறித்து கானா பாலா கருத்து ஒன்றை தெரிவித்து உள்ளார்.

அவர் கூறுகையில், “ பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா என்ன முயற்சி செய்தார். ஒரு சின்ன பிரச்னை என்றால் கூட நாள் முழுவதும் அழுது கொண்டே இருந்தார். அப்படி செய்தே 4 வாரம் ஓட்டிவிட்டால் அது பெயர் முயற்சியா? நீ எதற்காக அழுவ வேண்டும்? உனக்கு என்ன புதிய இடமா? முதல் நாளில் இருந்து அழுது கொண்டே இருக்கிறார். அனைத்துவிதமான டெஸ்ட் எடுத்து தான் உள்ளே அனுப்புகிறார்கள். எல்லாமே தெரியுது. நடனமாட, பாடல் பாட, நடிக்க, வேலை செய்ய என அனைத்தும் தெரிகிறது. நான் பாத்திரம், காய்கறி, சாப்பாடு வடிக்கவில்லையா? “ என்றார்.

இதனிடையே நிகழ்ச்சி முடிந்து கிட்டதட்ட ஐந்து நாட்களுக்கு பிறகு அர்ச்சனா தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், “ அதில், ” பீரவீன் சார், உங்கள் வழிகாட்டுதல் மற்றும் ஊக்கத்தின் சிம்பொனி. ஒரு நல்ல ஆசிரியரின் மந்திரம். உங்கள் அன்புடன் தொடர்ந்து வழி நடத்தியதற்கு மிக்க நன்றி என்றென்றும் உங்கள் மாணவர் ” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.