Udhayam Theatre: உதயம் தியேட்டர் முன்னாள் உரிமையாளர் கைது
சென்னை உதயம் தியேட்டர் உரிமையாளர் செக் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சினிமா பைனான்ஷியர் போத்ராவிடம் கடந்த 2002ம் ஆண்டு உதயம் தியேட்டரின் அன்றைய உரிமையாளராக இருந்த மணி 64, ராஜிவ் காந்தி அறக்கட்டளை நிர்வாகிகள் ஆகியோர் 35 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளனர். இதில் 25 லட்சம் ரூபாய்க்கு மணி கொடுத்த காசோலை வங்கியில் பணம் இல்லாததால் திரும்பி வந்தது.
இதையடுத்து கடந்த 2015ம் ல் தொடரப்பட்ட வழக்கில் மணி உள்ளிட்டோருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை உச்சநீதிமன்றமும் உறுதி செய்திருந்தது. ஆனாலும் மணி கைது செய்ய தாமதம் நிலவியது.
இந்நிலையில் போத்ரா தரப்பில் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இது நீதிமன்ற உத்தரவுப்படி கீழ்ப்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் மணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்