February Theatre Release : பிப்ரவரி முதல் வாரம்.. திரையரங்கு ரிலீஸில் கலைக்கட்டும் படங்கள்.. ஒரு பார்வை-february tamil movies theatre released on first week - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  February Theatre Release : பிப்ரவரி முதல் வாரம்.. திரையரங்கு ரிலீஸில் கலைக்கட்டும் படங்கள்.. ஒரு பார்வை

February Theatre Release : பிப்ரவரி முதல் வாரம்.. திரையரங்கு ரிலீஸில் கலைக்கட்டும் படங்கள்.. ஒரு பார்வை

Aarthi Balaji HT Tamil
Feb 02, 2024 08:45 AM IST

பிப்ரவரி முதல் வாரம் திரையரங்குகளில் ரிலீஸாகும் படங்கள் பற்றி பார்க்கலாம்.

வடக்குப்பட்டி ராமசாமி
வடக்குப்பட்டி ராமசாமி

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. இதில் நாயகியாக, , மேகா ஆகாஷ் நடித்து உள்ளார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் விஸ்வ பிரசாத் தயாரித்துள்ள இந்தப் படத்தை கார்த்திக் யோகி எழுதி இயக்கி உள்ளார். இந்த படத்தில், விஜய், எம்.எஸ். பாஸ்கர், மாறன், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், சுரேஷ் பிரசாந்த் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து உள்ளனர்.

'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படம் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி ரிலீஸாகிறது.

மறக்குமா நெஞ்சம்

விஜய் டிவி தொகுப்பாளர் ரக்‌ஷன் நடித்துள்ள திரைப்படம் 'மறக்குமா நெஞ்சம்'. யோகேந்திரன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் தீனா, பிராங்ஸ்டர் ராகுல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சச்சின் வாரியர் இசையமைத்து உள்ள இத்திரைப்படமும் பிப்ரவரி 2 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.

டெவில்

மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டெவில்'. 'சவரக்கத்தி' திரைப்பட புகழ் இயக்குநர் ஆதித்யா இப்படத்தை இயக்கி உள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபா ஶ்ரீ ஆகியோருடன் இயக்குநர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி 2 ஆம் ரிலீஸ் ரேஸில் ஐக்கியமாகி உள்ளது. இந்தப் படத்துக்கு இயக்குநர் மிஷ்கின் முதல்முறையாக இசையமைத்து உள்ளார்.

சிக்லெட்ஸ்

இயக்குநர் முத்து இயக்கத்தில் புதுமுகங்களான சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், நயன் சுரேகா என பலர் நடித்துள்ள திரைப்படம் 'சிக்லெட்ஸ்'. இந்தத் திரைப்படமும் பிப்ரவரி 2-ம் தேதி அன்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே சமயத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்துக்கு பாலமுரளி பாலு இசையமைத்து உள்ளார்.

தெலுங்கு ரிலீஸ் படங்கள்

கிஸ்மத்

காமெடி என்டர்டெய்னராக உருவாகியுள்ள கிஸ்மத், பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியாக உள்ளது. ட்ரைலருக்குப் பிறகு இந்தப் படத்தின் மீது நல்ல க்ரேஸ் இருந்தது. இப்படத்தில் மதுவாதராலா புகழ் நரேஷ் அகஸ்தியா கதாநாயகனாக நடித்துள்ளார். அபினவ் கோமதம், ஸ்ரீனிவாஸ் வசரலா மற்றும் விஸ்வதேவ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீநாத் பதினேனி இயக்குகிறார். 

தீரா

தீரா திரைப்படம் பிப்ரவரி 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. விக்ராந்த் ஸ்ரீனிவாஸ் இயக்கிய இந்த மாஸ் ஆக்ஷன் படத்தில் லக்ஷ் சதலவாடா மற்றும் நேஹா பதான் ஹீரோயின்களாக நடித்து உள்ளனர். பத்மாவதி சதலவாடா இந்தப் படத்தைத் தயாரித்தார்.

கேம் ஆன்

கீதானந்த் மற்றும் நேஹா சோலங்கி நடித்த காதல் ஆக்‌ஷன் படமான ' கேம் ஆன் ' பிப்ரவரி 2 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை இளம் இயக்குனர் தயானந்த் இயக்குகிறார். இளைஞர்களுடன் இணையும் வகையில் குடும்ப உணர்வுகளும் இந்தப் படத்தில் இருக்கும் என்று இயக்குநர் சமீபத்தில் கூறினார். கேம் ஆன் மூவி கஸ்தூரி கிரியேஷன்ஸ் மற்றும் கோல்டன் விங்ஸ் புரொடக்ஷன்ஸ் பேனர்களால் தயாரிக்கப்படுகிறது.

சாத்விக் வர்மா, ஜாக் ராபின் மகன் மற்றும் ரசீம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள சிக்லெட்ஸ் தெலுங்கு திரைப்படம் பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியாக உள்ளது. முத்து பி இந்தப் படத்தை யூத்புல் எண்டர்டெயினராக இயக்கியுள்ளார்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.