தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ethirneechal: மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியதா.. அண்ணா நான் வரேன்.. களத்தில் இறங்கிய கதிர்!

Ethirneechal: மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியதா.. அண்ணா நான் வரேன்.. களத்தில் இறங்கிய கதிர்!

Aarthi Balaji HT Tamil
Jun 01, 2024 08:16 AM IST

Ethirneechal Serial: அப்பத்தா இறப்பு, ஜீவானந்தம் மனைவி கொலை, தர்ஷினி கடத்தல் வழக்கு என அனைத்திலும் குணசேகரன் செய்தது ஆதாரத்துடன் தெரிந்த காரணத்தினால் அவர் கைது செய்யப்பட்டார்.

மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியதா.. அண்ணா நான் வரேன்.. களத்தில் இறங்கிய கதிர்!
மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியதா.. அண்ணா நான் வரேன்.. களத்தில் இறங்கிய கதிர்!

ட்ரெண்டிங் செய்திகள்

பகல் சீரியல்களை விட இரவு சீரியல்

அதிலும் பகல் சீரியல்களை விட இரவு சீரியல்களுக்கு தான் மவுசு அதிகம். அப்படி மக்களின் மனதில் இடம் பிடித்த சீரியல் தான், எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை கிடைத்து வந்தது. இரவு 9 மணி வந்தால் உடனே பெண்கள் கண்டிப்பாக டிவி முன்பு அமர்ந்து இந்த சீரியல் பார்க்க அமர்ந்துவிடுகிறார்கள்.

எதிர்நீச்சல்

தர்ஷினி கடத்தல் விஷயம் நடந்து முடிந்த பிறகு நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் எதிர்நீச்சல் சீரியல் சென்று கொண்டு இருந்தது.

தற்போது அண்ணை எதிர்த்து தம்பிகள் நிற்பதால் சற்று சீரியல் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. ஒட்டுமொத்த குடும்பமும் குணசேகரனுக்கு எதிராக நிற்கிறார்கள்.

ஞானம், கரிகாலனிடம் பணத்தை கொடுத்து புதிய தொழில் செய்வதாக சென்று ஏமாந்து இருக்கிறார். கதிரும் தனக்கு வரவேண்டிய காது குத்து மொய் எதுவும் வராததால் ஏமாற்றம் அடைந்து உள்ளார்.

கைதான குணசேகரன்

எதிர்நீச்சல் சீரியலின் குணசேகரன் செய்தது கொஞ்சம் நெஞ்சம் கிடையாது. தன்னுடைய ஆண் ஆதிக்கம் குணத்தால் பலரின் உயிர்களை எடுத்து இருக்கிறார். சொத்து விஷயத்தில் தனக்கு எதிராக இருந்த அப்பத்தாவை, விஷம் கொடுத்து கார் விபத்தில் உயிர் பிரிந்தது போல் சித்தரித்தார்.

ஜீவானந்தம் மேல் இருக்கும் கடுப்பில் அவரை கொலை செய்ய தன் தம்பி, கிள்ளிவளவனுடன் இணைந்து ஜீவானந்தம் மனைவியை சுட்டு கொலை செய்தார்.

அடுத்தது கொடூரத்தின் உச்சம் தன் மனைவியை பழி தீர்க்க வேண்டும் என்பதற்காக சொந்த மகள் தர்ஷினியை கடத்தி கொடுமை செய்தார்.

இதனிடையே அப்பத்தா இறப்பு, ஜீவானந்தம் மனைவி கொலை, தர்ஷினி கடத்தல் வழக்கு என அனைத்திலும் குணசேகரன் செய்தது ஆதாரத்துடன் தற்போது தெரியவந்து உள்ளது. அதனால் அவர் நேற்றைய எபிசோட்டில் கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில் வழக்கம் போல் தன் மகனுக்கு ஆதரவாக நிற்கிறார் விசாலாட்சி. மறுபக்கம் கரிகாலனும் மாமாவை நான் சென்று அழைத்து வருகிறேன் என சொல்கிறேன். 

களத்தில் இறங்கிய கதிர்

யாரும் எதிர்பார்க்காத விதமாக மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாகிறது. கதிர் யாரும் போக வேண்டாம் தான் சென்று அண்ணனை அழைத்து வருகிறேன் என சொல்கிறார். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிந்தது. இதை பார்த்த ரசிகர்கள் ஏன் கதிர் இது போன்று செய்கிறார்? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். மீண்டும் நந்தினி மேல் அவருக்கு கோபம் ஏற்படுமா? என்ற சந்தேகமும் எழுந்து உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்