Ethirneechal Serial: அம்பலமான தில்லுமுல்லு தனம்.. அதிரடியாக கைதான குணசேகரன்.. இனி நடக்க போவது என்ன?
Ethirneechal Serial: அப்பத்தா இறப்பு, ஜீவானந்தம் மனைவி கொலை, தர்ஷினி கடத்தல் வழக்கு என அனைத்திலும் குணசேகரன் செய்தது ஆதாரத்துடன் தற்போது தெரியவந்து உள்ளது.
Ethirneechal Serial: வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு சீரியல் தான். அதிலும் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் என்றால் அவ்வளவு இஷ்டம். காலை டிவி ஆன் செய்தால் இரவு வரை சன் தொலைக்காட்சியில் சீரியல் தான் ஓடும்.
பகல் சீரியல்களை விட இரவு சீரியல்
அதிலும் பகல் சீரியல்களை விட இரவு சீரியல்களுக்கு தான் மவுசு அதிகம். அப்படி மக்களின் மனதில் இடம் பிடித்த சீரியல் தான், எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை கிடைத்து வந்தது. இரவு 9 மணி வந்தால் உடனே பெண்கள் கண்டிப்பாக டிவி முன்பு அமர்ந்து இந்த சீரியல் பார்க்க அமர்ந்துவிடுகிறார்கள்.
குணசேகரன் இறப்பு
அதற்கு காரணம், அந்த சீரியலில் இடம் பெற்ற குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து. ஆம், அவரது கரடுமுரடான வில்லனிசம் ஏராளமானோரை இந்த சீரியலுக்கு அழைத்து வந்தது.
ஆனால் கடந்த வருடம் எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட, சீரியலுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. சீரியல் கதை முழுவதுமாக மாறியது. அவர் பாத்திரத்தை நிரப்ப முடியாமல் போனது சீரியலின் டிஆர்பியில் கடும் அடியை சந்தித்து இருக்கிறது.
எதிர்நீச்சல்
தர்ஷினி கடத்தல் விஷயம் நடந்து முடிந்த பிறகு நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் எதிர்நீச்சல் சீரியல் சென்று கொண்டு இருந்தது.
தற்போது அண்ணை எதிர்த்து தம்பிகள் நிற்பதால் சற்று சீரியல் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. ஒட்டுமொத்த குடும்பமும் குணசேகரனுக்கு எதிராக நிற்கிறார்கள்.
ஞானம், கரிகாலனிடம் பணத்தை கொடுத்து புதிய தொழில் செய்வதாக சென்று ஏமாந்து இருக்கிறார். கதிரும் தனக்கு வரவேண்டிய காது குத்து மொய் எதுவும் வராததால் ஏமாற்றம் அடைந்து உள்ளார்.
கைதான குணசேகரன்
எதிர்நீச்சல் சீரியலின் குணசேகரன் செய்தது கொஞ்சம் நெஞ்சம் கிடையாது. தன்னுடைய ஆண் ஆதிக்கம் குணத்தால் பலரின் உயிர்களை எடுத்து இருக்கிறார். சொத்து விஷயத்தில் தனக்கு எதிராக இருந்த அப்பத்தாவை, விஷம் கொடுத்து கார் விபத்தில் உயிர் பிரிந்தது போல் சித்தரித்தார்.
ஜீவானந்தம் மேல் இருக்கும் கடுப்பில் அவரை கொலை செய்ய தன் தம்பி, கிள்ளிவளவனுடன் இணைந்து ஜீவானந்தம் மனைவியை சுட்டு கொலை செய்தார்.
அடுத்தது கொடூரத்தின் உச்சம் தன் மனைவியை பழி தீர்க்க வேண்டும் என்பதற்காக சொந்த மகள் தர்ஷினியை கடத்தி கொடுமை செய்தார்.
இதனிடையே அப்பத்தா இறப்பு, ஜீவானந்தம் மனைவி கொலை, தர்ஷினி கடத்தல் வழக்கு என அனைத்திலும் குணசேகரன் செய்தது ஆதாரத்துடன் தற்போது தெரியவந்து உள்ளது. அதனால் அவர் நேற்றைய எபிசோட்டில் கைது செய்ய காவல் துறையினர் வந்தனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்