Anand Srinivasan: சுயகட்டுபாடு எனும் தாரக மந்திரம் - கைகொள்ள செய்ய வேண்டியவை! - ஆனந்த் ஸ்ரீநிவாசன் பேட்டி!
வாழ்கையில் நமது லட்சியத்தை அடைய சுயகட்டுப்பாடு எந்தளவிற்கு முக்கியமானது? அதை கைகொள்ள நாம் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? என்பதை பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த ஸ்ரீநிவாசன் விளக்குகிறார்.
எடை ஒரு சிறந்த உதாரணம்
சுயக் கட்டுப்பாடு இல்லை என்றால் என்ன ஆகும் என்பதற்கு எனது எடை ஒரு சிறந்த உதாரணம். எனக்கு சாப்பாட்டில் சுய கட்டுப்பாடு இல்லாத காரணத்தினால் தான் நான் இப்படி எடை கூடி விட்டேன். தற்போது நான் சுயக் கட்டுப்பாட்டை கொண்டு வந்து எடையை குறைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு 20 வருடங்களாக இந்த எடை அதிகரித்து வந்திருக்கிறது. ஆகையால் அதை குறைக்கவும் பல வருடங்கள் ஆகும். வாழ்க்கையில் எது செய்தாலும் சுயக் கட்டுப்பாடு என்பது மிக மிக முக்கியம்.
விடாமுயற்சி
சுய கட்டுப்பாட்டில் முதல் விஷயம் முக்கியமான விஷயம் எந்த ஒரு விஷயத்தையும் விடாமுயற்சியுடன் தொடர்ந்து செய்தல். இந்த பழக்கம் இருந்தால்தான் நீங்கள் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். ஏதோ ஒரு நாள், இரண்டு நாள் என்று செய்யாமல் பல வருடங்களாக செய்யும் பட்சத்தில் தான் பலன் கிடைக்கும்
டார்கெட் முக்கியம் அமைச்சரே
முதலில் நீங்கள் உங்களுக்கான ஒரு சிறிய டார்கெட்டை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். எடுத்த எடுப்பிலேயே மிகப்பெரிய டார்கெட்டை நிர்ணயித்து விட்டு அதை அடைய வேண்டுமென்றால் அது முடியாது.
நீங்கள் எடுத்துக் கொண்ட ஒரு சிறிய டார்கெட்டை தினமும் விடா முயற்சியுடன் செய்யுங்கள். அந்த டார்கெட் ஆனது ஆறு மாதத்தில் பத்து ஆகும் ஒரு வருடத்தில் இருபதாக மாறும்.
அளவிடுங்கள்
இரண்டாவது நீங்கள் செய்வதை அளவிடுங்கள். அதாவது உங்களால் செய்ய முடிந்ததை நீங்கள் அளவிட முடியும். உதாரணமாக வெயிட்டை குறைக்க வேண்டும் என்றால் இன்று நான் பத்தாயிரம் அடிகள் நடப்பேன் என்று எடுத்துக் கொள்வது. அதே போல நீங்கள் செய்வதை உங்களுக்கு நெருக்கமானவரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். பகிர்ந்து கொள்ளுதல் என்பது அடுத்த முறையும் அந்த உடற்பயிற்சியை உங்களை செய்ய வைக்கும்.
மோட்டிவேஷன்
மோட்டிவேஷன் என்பது நமக்கு உள்ளே இருந்து வர வேண்டும் அந்த குரல் நம்மை துரத்திக் கொண்டே இருக்கும் பட்சத்தில் தான் நாம் செயலாற்றுவோம். உங்களை அது ட்ராக்கில் இருந்து வெளியே செல்லும் பொழுது உள்ளே இழுத்து வர உதவிகரமாக இருக்கும்.
உடல்நலம் பேணல்
நன்றாக தூங்க வேண்டும்; நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை தவிர்க்கப்படும் பட்சத்தில் உங்களது உடம்பில் சக்தியானது குறைந்து விடும். உங்களது சக்தியையும் உங்களது நேரத்தையும் எங்கு செலவிடுகிறீர்கள் என்பது மிக மிக முக்கியம். அதிகப்படியான எனர்ஜியாக இருக்கும் பொழுது உங்களது டார்கெட்டை நீங்கள் அடைய முயற்சி செய்யுங்கள்.
டாபிக்ஸ்