லக்கி அடித்ததா லக்கி பாஸ்கருக்கு? 2 ஆம் நாள் வசூல் எவ்வளவு?படக்குழு அறிவிப்பு!
பொருளாதார குற்றப் பின்னணியை கதைக் கொண்ட துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் திரைபடத்தின் 2 நாள் வசூல் நிலவரத்தை படக்குழு வெளியீட்டுள்ளது.

பொருளாதார குற்றப் பின்னணியை கதையாகக் கொண்ட துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் திரைபடத்தின் 2 நாள் வசூல் நிலவரத்தை படக்குழு வெளியீட்டுள்ளது.வித்தியாசமான மற்றும் விறுவிறுப்பான கதையம்சம் கொண்ட திரைப்படம் வெளியாகும் போது மக்களிடத்தில் சிறந்த வரவேற்பை பெறும் என்பதை லக்கி பாஸ்கர் படம் நீரூபித்துள்ளது. இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
படத்தின் கதை
தனியார் வங்கியில் பணி புரியும் துல்கர் சல்மான் அவரது குடும்ப வறுமையின் காரணமாக ப்ரோமோஷன்காக காத்துக் கொண்டிருக்கிறார். இருப்பினும் ஊழியர்களின் அரசியலால் அந்த ப்ரோமோஷன் வேறு ஒரு நபருக்கு கிடைக்கிறது. இதன் காரணமாக வங்கியில் இருந்து பணத்தை திருடி வெளியில் ராம்கியுடன் இணைந்து தொழில் செய்கிறார்.
இந்த தொழிலில் பெறும் தொடர் லாபத்தால் மீண்டும் வங்கியில் திருடுகிறார். திருடிய பணத்தை திருப்பி அங்கேயே வைத்து விடுகிறார். ஒரு நாளில் இது தவறான உணரும் துல்கர் சல்மான் திருடுவதை நிறுத்தி விடுகிறாரா? இல்லை தொடர்கிறாரா? என்பதே மீதி கதை முழுக்க முழுக்க குற்ற பின்னணியை கொண்டு இந்த கதை உருவாகியுள்ளது. சுவாரசியமான திரைக்கதை நேர்த்தியான நடிப்பு சரியான வசனங்கள் என படம் அனைத்து துறைகளிலும் வெளுத்து வாங்குகிறது.