அதிரடி தீபாவளி ஸ்பெஷல்! டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதுப்படங்கள் லிஸ்ட்!
ஒவ்வொரு வருடமும் தீபாவளி அன்று புதிய படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் ஆவது வழக்கம் அதேபோல் இன்றும் பல புது படங்கள் ரிலீசாக உள்ளன இந்நிலையில் டிவிகளிலும் திரையரங்குகளில் ஓடிய புது படங்கள் ஒளிபரப்பாக உள்ளன
இருளைப் போக்கி ஒளியை கொண்டு வரும் தீப ஒளி திருநாளான தீபாவளி இன்று இந்தியா முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் தீபாவளி அன்று புதிய படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் ஆவது வழக்கம் அதேபோல் இன்றும் பல புது படங்கள் ரிலீசாக உள்ளன. இந்நிலையில் டிவிகளிலும் திரையரங்குகளில் ஓடிய புது படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. டிவிகளில் இன்று ஒளிபரப்பாக இருக்கக்கூடிய புதிய படங்களின் பட்டியலை இங்கு காண்போம்.
சன் டிவி
தனுஷின் ஐம்பதாவது படமாக அவர் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ராயன் இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது மேலும் கலையான விமர்சனங்களையும் பெற்றிருந்தது இந்நிலையில் இப்படம் இன்று சன் டிவியில் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது இப்படத்தில் நடிகர் தனுசு உடன் செல்வராகவன் எஸ் ஜே சூர்யா சந்திப் கிஷன் சரவணன் காளிதாஸ் ஜெயராம் ரித்திகா சிங் துஷாரா விஜயன் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விஜய் டிவி
விஜய் டிவியில் டபுள் டமாக்காகவாக இரண்டு புதிய படங்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன. விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாக வெளியாகி இந்திய அளவில் பெரும் வரவேற்பு பெற்ற திரைப்படம் மகாராஜா, இப்படத்தை நித்திலன் சுவாமிநாதன் இயக்கியிருந்தார். மேலும் இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அதிக வரையறுப்பை பெற்று இருந்தது. இபபடத்தில் மம்தா மோகன் தாஸ, சாச்சனா மற்றும் அனுராக காஷியாப் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். இந்நிலையில் இப்படம் இன்று மாலை 5:30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது மேலும் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை சீரிஸ் வரிசையில் வந்த அரண்மனை 4 திரைப்படம் இன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது அரண்மனை 4 வெளியாகி பெருமளவில் வசூலை அள்ளிக் குவித்தது. மேலும் பல மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாகி வரவேற்பை பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது இப்படத்தில் தமன்னா, ராசி கண்ணா சுந்தர் சி கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
கலைஞர் டிவி
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான திரைப்படம் இந்தியன் 2, இப்படத்தில் ரகுல் பிரீத் சிங், சித்தார்த் ஜெகன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் மேலும் இப்படம் முன்பு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இருந்தது. எனவே பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ஏமாற்றத்தையே கொடுத்தது. மேலும் பல விமர்சனங்களையும் பெற்றிருந்தத. இந்நிலையில் இந்தியன் மூன்று வெளியாகும் என்ற அறிவிப்பும் படத்தின் இறுதியில் வெளியிடப்பட்டிருந்தது. இத்திரைப்படம் கலைஞர் டிவியில் இன்று மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடித்து வெளியான படம் டிமாட்டி காலனி 2. இப்படம் டிமான்டி காலனி முதலாம் பாக படத்தின் சீக்குவன்ஸ் ஆகும். இப்படத்தில் நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். தங்கலான் படத்துடன் சேர்ந்து வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி அடைந்தது. தற்போது டிமான்டி காலனி 2 படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.
டாபிக்ஸ்