அந்த படம்'னா ஓகே… என்ன சொல்கிறார் திஷா?
ஆண் தான் சூப்பர் ஹீரோ படங்களில் நடிக்க வேண்டும் என்பதை தான் மாற்ற விரும்புவதாக திஷா பதானி தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை திஷா பதானி நடனத்தாலும், தனது நடிப்புத் திறமையாலும் ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை அடித்துள்ளார். இவர் பாலிவுட் மட்டுமின்றி தமிழிலும் நடித்து உள்ளார். அதுவும் முதல் படமே கிரிக்கேட் வீரர் எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட தோனி படத்தில் நடித்திருந்தார்.
இப்படமானது இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் டப் செய்து வெளியானது. இத்திரைப்படத்தின் வாயிலாக இவர் திரைத்துறையில் புகழ் பெற்றுள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் நடித்து இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் திஷா பதானி சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அவர் பேசியதாவது, "ஆக்ஷன் மற்றும் சண்டைக்காட்சிகள் என்றால் எப்போதும் ஒரு ஆண் தான் நடிக்க வேண்டும் என்று சொல்கின்றனர். அந்த பிம்பத்தை நான் உடைக்க விரும்புகிறேன். மெல்ல மெல்ல விஷயங்கள் மாறிக்கொண்டே இருக்கிறது. விரைவில் பெண்கள் ஆக்ஷன் படங்களில் தலைகாட்ட வேண்டும். Lara Croft: Tomb Raider (2001) போன்ற ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன். அது ஒரு கனவாகிவிட்டது.
ஒரு சூப்பர் ஹீரோ படத்தில் நான் இருக்க வேண்டும் என்பது மிகப்பெரிய ஆசை. நான் ஒரு மார்வெல் திரைப்படங்களின் ரசிகை. என் திரைப்பயணத்தில் நான் ஒரு சூப்பர் ஹீரோ படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என பலமுறை யோசித்து இருக்கிறேன். அத்தகைய படங்களைச் செய்வது கடினமான ஒன்று" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் சமூக வலைதளங்களில் அவரை அவதூறாகப் பேசுவதை எப்படி பார்க்கிறீர்கள் எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த திஷா, “சமூக வலைதளங்களில் என் மீது வெறுப்பைக் காண்பிக்கும் கருத்துகளைத் தடுக்க நான் கற்றுக்கொண்டேன். இன்ஸ்டாகிராம் என்பது சுய வெளிப்பாட்டிற்கான ஒரு தளம்.
அதனால் நான் ரசிப்பதைப் பதிவிடுகிறேன். அது பிடிக்காமல் சிலர் வெறுப்பை என் மீது காண்பித்தால், அவர்கள் தவறு. இதுபோல் சிலர் பேசுவது மிகவும் எளிமையான ஒன்று. எதிர்மறையான கருத்துக்களுக்கு நான் கவனம் செலுத்துவதில்லை” எனக் கூறினார்.
படத்தில் நடிப்பது மட்டுமின்றி உடற்பயிற்சியில் அதிகமாக திஷா பதானி நேரங்களைச் செலவு செய்து வருகிறார். ஜிம்மில் ஒர்க்- அவுட் செய்யும் புகைப்படங்கள், வீடியோக்களை அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டு வருகிறார்.
தொடர்புடையை செய்திகள்