HBD Vetrimaaran: தமிழை கற்றுக் கொண்ட வெற்றிமாறன் - படைப்பாளி உருவான தருணம்!
இயக்குனர் வெற்றிமாறன் இன்று தனது 48வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
நூறு ஆண்டு தமிழ் சினிமாவில் எத்தனையோ திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. ஒரு சில இயக்குனர்கள் மட்டும்தான் தங்களது கலையை படைப்பாக வெளிப்படுத்துகின்றனர். அப்படி எத்தனையோ இயக்குனர்களை பார்த்துவிட்டு அவர்களை முன்னோடிகளாக எடுத்துக் கொண்டு தற்போது இருக்கக்கூடிய இயக்குனர்கள் தங்களது படைப்புகளை செதுக்கி மக்களுக்கு விருந்தாக்குகின்றனர்.
அந்த வரிசையில் இருக்கக்கூடிய திரைப்பட படைப்பாளி இயக்குனர்களில் ஒருவர் தான் வெற்றி மாறன். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு சகோதரர் போல இருக்கும் இவர் படைப்புகள் பிரமிக்க வைக்கும் அளவிற்கு இருக்கும். முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றி கண்டு தமிழ் சினிமாவில் தனது பெயரை தடம் பதித்தவர்.
நடிகர் தனுஷை வைத்து பொல்லாதவன் என்ற திரைப்படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார். பின்னர் ஆறு ஆண்டுகள் கழித்து அதே தனுஷை வைத்து ஆடுகளம் என்ற படைப்பை கொடுத்து இரண்டு தேசிய விருதுகளை வெற்றிமாறன் தட்டிச் சென்றார்.
வெற்றிமாறன் குடும்பத்தில் சினிமாவிற்கு அனுமதியே கிடையாது. அவரின் அப்பாவிற்கு சினிமா பிடிக்காது. ஆனால் வெற்றிமாறனின் முழு பயணமும் சினிமாவில் தான் இருக்கின்றது.
சென்னை லயோலா கல்லூரியில் வெற்றிமாறன் படித்துக் கொண்டிருந்த பொழுது அந்த கல்லூரிக்கு விசிட்டிங் ப்ரொபஸராக இயக்குனர் பாலு மகேந்திரா வந்திருக்கிறார். அப்போது கல்லூரியில் தமிழ் படிக்கத் தெரிந்த ஒரு பையன் வேண்டும் என கேட்டு இருக்கிறார்.
அதற்குப் பிறகு இயக்குனர் பாலுமகேந்திராவை வெற்றிமாறன் சந்தித்திருக்கிறார். தமிழ் சரியாக படிக்க தெரியாது என்பதை அப்போதுதான் பாலு மகேந்திரா தெரிந்துகொண்டார். அதன் பின்னர் வெற்றிமாறனை நன்றாக படிக்க வைத்து பல கதைகளை படிக்க வைத்து உதவி இயக்குனராக தன்னிடம் பாலு மகேந்திரா சேர்த்துக் கொண்டார்.
2007 ஆம் ஆண்டு தனது பயணத்தை தொடங்கிய வெற்றிமாறன் மொத்தமாகவே ஆறு படங்களை தான் முயற்சி உள்ளார். இந்த ஆறு படங்களும் வசூல் இறுதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றனர். தமிழ் சினிமாவில் இருந்து தவிர்க்க முடியாத வரலாற்று படைப்புகளாக இந்த ஆறு படங்களும் இருந்து வருகின்றன.
இயற்கை விவசாயத்தில் அதிகம் ஈடுபாடு கொண்டவர் வெற்றிமாறன். தனியாக ஒரு இடம் வாங்கி அதில் தானே விவசாயம் செய்து வருகிறார் வெற்றி. காமெடி நடிகராக வலம் வந்த நடிகர் சீரியஸ் கதாநாயகனாக விடுதலை திரைப்படத்தின் மூலம் மிகப் பெரிய மாற்றத்தை கொடுத்தவர் வெற்றி தான்.
நடிகர் தனுஷுக்கும், இயக்குனர் வெற்றிமாறனுக்கும் இடையே இருக்கக்கூடிய நட்பு குறித்து அனைவரும் அறிந்த ஒன்று. வெற்றி எதை சொன்னாலும் அப்படியே தலையாட்டக் கூடியவர் தனுஷ். ஒரு கதையை உருவாக்கும் பொழுது நடிகர் தனுசை மனதில் வைத்துக் கொண்டுதான் எழுதுவேன் என வெற்றிமாறன் அடிக்கடி கூறியதை அனைவரும் கேட்டதுண்டு.
அப்படி இருவருக்கும் இடையே இருக்கக்கூடிய நட்பு திரைப்படங்களில் அப்படியே முழுமையாக செயல்பட்டு மிகப்பெரிய வெற்றிகளை இவர்களின் கூட்டணி பெற்றுள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் தனது 48வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஒரு சிற்பி போல் சினிமாவை செதுக்க கூடிய சொற்ப இயக்குனர்களின் வெற்றிமாறன் முன்னிலை வகுத்து வருகிறார் என்பது எப்போதும் பாராட்டுக்குரிய விஷயமாகும். அப்படிப்பட்ட இயக்குனருக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்