தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Indian 2: 70 நாள் மேக்கப்.. சாப்பிட முடியாது.. இந்தியன் 2 படத்தில் கமல் உழைப்பு பார்த்து நெகிழ்ந்து போன ஷங்கர்

Indian 2: 70 நாள் மேக்கப்.. சாப்பிட முடியாது.. இந்தியன் 2 படத்தில் கமல் உழைப்பு பார்த்து நெகிழ்ந்து போன ஷங்கர்

Aarthi Balaji HT Tamil
Jun 25, 2024 01:00 PM IST

Indian 2: இந்தியன் 2 ட்ரெய்லர் வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில், இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் கமல் ஹாசன், எஸ்ஜே சூர்யா, சித்தார்த், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்தியன் 2 படத்தில் கமல் உழைப்பு பார்த்து நெகிழ்ந்து போன ஷங்கர்
இந்தியன் 2 படத்தில் கமல் உழைப்பு பார்த்து நெகிழ்ந்து போன ஷங்கர்

சென்னை வடபழனியில் உள்ள தனியார் மாலில் இந்தியன் 2 ட்ரெய்லர் வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில், இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் கமல் ஹாசன், எஸ்ஜே சூர்யா, சித்தார்த், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

விழாவில் இயக்குநர் ஷங்கர் பேசுகையில், " இந்த படத்தில் நிறைய குடும்பங்கள் வந்து போகும். படம் முடியும் போதும் அனைவரையும் யோசிக்க வைக்கும் என நம்புகிறேன். இந்த படம் சிறப்பாக அமைய கமல் ஹாசன் தான் காரணம்.

ட்ரெண்டிங் செய்திகள்

சாப்பிட முடியாது

அந்த மேக்கப் போட்டால் சரியாக சாப்பிட முடியாது. தண்ணீர், ஜூஸ் மாதிரி குடிக்க தான் முடியும். எல்லாருக்கும் முன்பு அவர் தான் வருவார். அவர் தான் கடைசியாக செல்வார். அவரின் உழைப்பை சொல்லவே முடியாது.

இன்றைய காலகட்ட இந்தியன் தாத்தா

பகுதி 1 விட கமலை இரண்டாம் பகுதியில் நன்றாக பார்க்க முடியும். இன்றைய காலகட்டத்தில் இந்தியன் தாத்தா இருந்தால் என்னென்ன செய்வார் என்பதை வைத்து தான் இந்தியன் 2 படத்தை உருவாக்கி இருக்கிறோம்.

70 நாட்கள் மேக்கப்

முதல் பாகம் தமிழ்நாட்டை சார்ந்து மட்டும் இருந்தது. இரண்டாம் பாகம் எல்லைகளை கடந்து உருவாகி உள்ளது. இந்தியன் முதல் பாகத்தில் நடிக்கும் போது 20 நாட்கள் மேக்கப் போட்டு நடித்தார் கமல். ஆனால் இரண்டாம் பாகத்திற்கு 70 நாட்கள் அந்த மேக்கப் போட்டு நடித்திருக்கிறார். நான் எதிர்பார்த்தை விட அனிருத் சிறப்பாக பாடல் அமைத்து கொடுத்து இருக்கிறார்.

வித்தியாசமான கதாபாத்திரத்தில் விவேக்

இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் விவேக் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் வருவார். நீண்ட காலங்களுக்கு பிறகு அவரை திரையில் பார்ப்பதற்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படத்திற்கு உழைத்த அனைவருக்கும் நன்றி” என்றார். 

கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் காஜல் அகா்வால், சமுத்திரகனி, பாபி சிம்ஹா, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து உள்ளனா். லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தியன் 2 வரும் ஜூலை 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி, சென்னை, ராஜமுந்திரி, போபால், குவாலியர் போன்ற பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தது. இதன் படப்பிடிப்புக்கு மத்தியில், பிப்ரவரி 2020ல் படக்குழுவில் ராட்சத கிரேன் விழுந்ததில் சிலர் உயிரிழந்தனர்.

அதன்பின், சூட்டிங் தொடங்கினாலும் கோவிட் பிரச்னை தலைவிரித்தாடியது. இதனால் ஒட்டுமொத்தமாக, இதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. பின், 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அதன்பின் சமீபத்தில் 2024 மார்ச்சில் அதன்பிடிப்பு முடிவடைந்தது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்