Dindigul: சார் பப்ளிக்..பப்ளிக்.. சட்டையை பிடித்த போலீஸிடம் குடிமகன் செய்த களேபரம்.. ஆட்டோவில் அலேக்காக தூக்கிய போலீஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dindigul: சார் பப்ளிக்..பப்ளிக்.. சட்டையை பிடித்த போலீஸிடம் குடிமகன் செய்த களேபரம்.. ஆட்டோவில் அலேக்காக தூக்கிய போலீஸ்!

Dindigul: சார் பப்ளிக்..பப்ளிக்.. சட்டையை பிடித்த போலீஸிடம் குடிமகன் செய்த களேபரம்.. ஆட்டோவில் அலேக்காக தூக்கிய போலீஸ்!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 30, 2023 01:47 PM IST

திண்டுக்கல்லில் போக்குவரத்து போலீசாருடன் குடிபோதை ஆசாமி வாக்குவாதம் செய்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Dindigul: A video of a drunken man arguing with traffic police in dindigul is now going viral on social media
Dindigul: A video of a drunken man arguing with traffic police in dindigul is now going viral on social media

இது போன்ற சம்பவங்களில் வீடியோ ஆதாரம் என்பது மிக முக்கிய பங்கு வகிக்கும். காரணம், அந்த ஆதாரத்தின் அடிப்படையில்தான் குற்றம் புரிந்தவரின் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில் அதே போன்றதொரு சம்பவம் திண்டுக்கல்லில் நடந்துள்ளது.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக குடிபோதையில் இருசக்கர வாகனத்தை தள்ளாடி ஓட்டி வந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். 

அப்போது குடிபோதை ஆசாமி போலீசார் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றார். இதனையடுத்து போலீசார் அவரின் சட்டையை பிடித்து இழுக்க சார்... மக்கள்.. பார்க்கிறார்கள்.. என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்து விட்டார். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த ஆட்டோவை வரவழைத்து குடிபோதை ஆசாமியை அள்ளிப்போட்டு போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.