Cartoon Network shutdown:90ஸ் கிட்களின் பால்ய நினைவு பொக்கிஷத்துக்கு மூடுவிழா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Cartoon Network Shutdown:90ஸ் கிட்களின் பால்ய நினைவு பொக்கிஷத்துக்கு மூடுவிழா?

Cartoon Network shutdown:90ஸ் கிட்களின் பால்ய நினைவு பொக்கிஷத்துக்கு மூடுவிழா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Oct 14, 2022 03:20 PM IST

90ஸ் கிட்களின் பால்ய வாழ்க்கையின் நினைவுகளை உள்ளடக்கிய Cartoon Network சேனல் 30 ஆண்டுகால சேவைக்கு பிறகு மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதுது. இனிமேல் தனியொரு சேனலாக இல்லாமல் வால்ட் டிஸ்னி அனிமேஷன் நிறுவனத்துடன் இணைந்து டிஜிட்டல் கண்டெண்ட்களை உருவாக்கத்தில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.

<p>கார்டூன் நெட்வொர்க் சேனல் மூடப்படுவதாக உலா வரும் தகவல்களுக்கு விளக்கம் கிடைத்துள்ளது&nbsp;</p>
<p>கார்டூன் நெட்வொர்க் சேனல் மூடப்படுவதாக உலா வரும் தகவல்களுக்கு விளக்கம் கிடைத்துள்ளது&nbsp;</p>

இதில் Cartoon Network சேனல் முழுக்க முழுக்க பல்வேறு விதமான அனிமேஷன் கார்டூன்களை கொண்டாக அமைந்திருக்கும். TNT சேனலை பொறுத்தவரை திரைப்பட சேனலாக செயல்பட்டு வந்தது. இதில் கிளாசிக்கான ஹாலிவுட் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வந்தது.

அந்த வகையில் பகல் நேரங்களில் குழந்தைகளுக்கும், இரவில் பொதுவான திரைப்பட சேனல் என இரண்டு விதமாக ஒளிபரப்பாகி வந்தது. Cartoon Networkஇல் ஒளிபரப்பாகி வந்த Popeye the sailor man, Scooby doo, The Adams Family, The Flinstones, Tom & Jerry kids, Johhny bravo உள்பட பல்வேறு கார்டூன்கள் சிறியவர் முதல் பெரியவர் வரை என அனைவரும் ரசித்து பார்த்து மகிழ்ந்தனர்.

பள்ளி விட்டு வீடு திரும்பியதும் நேரடியாக வந்து Cartoon Networkக்கு பார்க்கும் பரம்பரையாகவே 90ஸ் கிட்களின் வாழ்க்கை அமைந்திருந்தது.

2000த்தின் பிற்பகுதியில் இந்த Cartoon Network சேனல் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் வண்ணம் மாற்றப்பட்டது. அதற்கு ஏற்றார்போல் பல்வேறு புதிய கார்டூன்களும் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இணைய உலகம் நம்மை ஆக்கிரமிப்பதற்கு முன்னரே நம்மை இணைத்து கொண்ட இந்த Cartoon Network, 30 ஆண்டு கால சேவைக்கு பிறகு மூடுவிழா காண்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Cartoon Network சேனல் அதிக அளவில் ஆட்குறைப்பு நடைபெறுவதாகவும், விரைவில் அது மூடப்பட இருப்பதாகவும் அமெரிக்காவின் பிரபல ஊடகம் ஒன்ற வெளியிட்ட தகவலால், நெட்டிசன்கள் பலரும் RIP #CartoonNetwork என ஹேஷ்டாக்குடன் குறிப்பிட்டு தங்களது நினைவுகளை பகிர்ந்து வந்தனர்.

ஆனால் வார்னர் பிரதர்ஸ் மற்றும் Cartoon Network நிறுவனங்கள் தங்களது மூலோபய மறுசீரமைப்பைக்குகாக இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் தலைவர் சாம் ரிஜிஸ்டர் கூறியதாவது: " தங்களது தனி அடையாளங்களில் இந்த இரு நிறுவனங்களுக்கும் எவ்வித பாதிப்பும் கிடையாது. ஆனால் இவ்விரு நிறுவனங்களும் தங்களது தயாரிப்பு, மேம்பாடு குழுக்களை பகிர்ந்து கொள்ளும்.

ஐரோப்பாவை சேர்ந்த ஹானா பார்பெர்ரா ஸ்டுடியோஸ், வார்னர் பிரதர்ஸின் மற்றொரு நிறுவனமான டிஸ்கவரி ஆகியவை தனியொரு நிறுவனமாகவே செயல்படும். இவை மூன்றையும் வார்னர் பிரதர்ஸ் தலைமை தாங்கும்" என்றார்.

இதற்கிடையே தவறான தகவலை வெளியிட்ட ஊடகத்தை Cartoon Networkஇன் கலை இயக்குநர் டுவிட்டரில் விமர்சித்துள்ளார். அதில், இந்த முடிவுகள் பணிசெய்பவர்கள் பாதிக்ககூடியதாக அமையும். பரபரப்பான செய்தியை வெளியிடும் நோக்கில் இந்த தகவலை பரப்பியிருப்பது தெளிவாக தெரிகிறது. இதன் மூலம் பத்திரிகை நேர்மையின்மையும் வெளிப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.