செக்ஸியா இருந்தா மட்டும் போதுமா.. மண்டையில சரக்கு வேண்டாமா?.. தத்தளித்த தர்ஷா குப்தா.. எலிமினேட் செய்த பிக்பாஸ்
ஆரம்பத்தில் இருந்தே சுவாரசியம் இல்லாமல் விளையாடிய தர்ஷா, சில சமயங்களில் முட்டாள்தனமாகவும், பல நேரங்களில் வம்படியாக கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்றும் செயல்பட்டார்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8 வது சீசன் அக்டோபர் 6ம் தேதி தொடங்கி, பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இம்முறை கமல்ஹாசனுக்கு பதிலாக, நடிகர் விஜய்சேதுபதி களமிறங்கி இருக்க, அவருக்கே உரித்தான பாணியில் ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே கவுண்டர்களை அடுக்கி, தன்னை நோக்கி வந்த பால்கள் அனைத்தையும் சிக்சர்களாக பறக்க விட்டுக்கொண்டிருக்கிறார்.
போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 24 மணி நேரத்திற்குள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, சாச்சனா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பின் 3 நாட்கள் மக்களுடன் மக்களாக இந்த விளையாட்டை பார்த்து வந்த சாச்சனா, மீண்டும் அதிரடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.
2 ஆண் போட்டியாளர்கள் வெளியேற்றம்
இதையடுத்து, பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களால் ஃபேட் மேன் ரவீந்தர் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார். இந்நிலையில், ஒரு வாரமாக அவர் செய்த சேட்டைகளின் காரணமாகவும், அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டின் 2வது வாரத்தில், அர்னவ் பெண்கள் அணியினரால் நாமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
நாமினேஷன் லிஸ்ட்
பிக்பாஸ் வீட்டின் 3வது வாரத் தொடக்கத்தில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. அதில், போட்டியாளர்கள் எதிரணியில் உள்ளவர்களை தான் நாமினேட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டு போட்டியாளர்கள் யாரை வேண்டுமானாலும் நாமினேட் செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, பிக்பாஸ் வீட்டிலுள்ள முத்துக்குமரன், சௌந்தர்யா, அருண், சத்யா, அன்ஷிதா, தர்ஷா, ஜாக்குலின், பவித்ரா என 5 பெண் போட்டியாளர்களும், 3 ஆண் போட்டியாளர்களும் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்தனர்
நாமினேஷன் பாஸ்
இந்நிலையில், தங்கள் வீட்டிலுள்ள போட்டியாளர்களை காப்பாற்றுவதற்கான நாமினேஷன் ஃபிரி பாஸ் போட்டி நடத்தப்பட்டது. அதில் பெண்கள் அணி வெற்றி பெற்றனர். இதன் பின் அணியினருடன் கலந்து ஆலோசித்து இந்த வார எலிமினேஷனில் இருந்து பவித்ராவை காப்பாற்றி உள்ளனர்.
எலிமினேட் செய்யப்படுவது யார்?
இதையடுத்து, பவித்ராவைத் தவிர மற்ற 7 போட்டியாளர்களும் எலிமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அத்துடன் ஆண்கள் அணியினர் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இதனால், இந்த வாரத்தில் நிச்சயம் ஒரு பெண் போட்டியாளர் தான் வெளியேற்றப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜாக்குலின், அன்ஷிதா, தர்ஷா குப்தா ஆகிய 3 பேரில் ஒருவர் தான் வெளியேற்றப்பட உள்ளார் என கூறப்பட்டது. இந்த நிலையில், இதில் தர்ஷா குப்தா வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.
ஆரம்பத்தில் இருந்தே சுவாரசியம் இல்லாமல் விளையாடிய தர்ஷா, சில சமயங்களில் முட்டாள்தனமாகவும், பல நேரங்களில் வம்படியாக கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்றும் செயல்பட்டார். இதனை சமூக வலைதளவாசிகள் கமெண்ட்களில் வறுத்தெடுத்தனர். அதன் பிரதிபலிப்பே, இன்று அவரை பிக்பாஸ் வெளியேற்றி இருக்கிறார்.
இந்த வாரம் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ், ஹோட்டல் டாஸ்க்கை கொடுத்து முடிந்த அளவு பிக்பாஸ் வீட்டை பரபரப்பாக வைத்திருக்க முயன்றார். இதில் செளந்தர்யாவுக்கும், ஜாக்குலினுக்கும் இடையே மோதல் வெடித்தது. அதில் செளந்தர்யா ஜாக்குலினை போண்டோ மூஞ்சு என்று சொல்ல, உடலை வைத்து கிண்டல் செய்யாதே என்று கடுகடுத்தார் ஜாக். அதே போல சாச்சனாவுக்கும், ஜெஃப்ரிக்கும் இடையே மோதல் வெடிக்க, ஜெஃப்ரி சோபாவில் குத்திவிட்டு சென்றான். அந்த வரிசையில் ஆனந்திக்கும், முத்துக்குமரனுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில், ஆனந்தி முத்துவுடன் வாக்குவாதம் செய்ய முடியாமல் அழுது ஓடினார். இதனால் இந்த வாரம் விஜய்சேதுபதி தீர்த்து வைக்க ஏராளமான பஞ்சாயத்துகள் இருக்கின்றன. அவையெல்லாம் இன்றைய தினம் சரவெடியாய் வெடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
டாபிக்ஸ்