Dhanalakshmi: ’வாழ்க்கையின் முடிவு மரணம்’ - கதறி அழுத பிக் பாஸ் தனலட்சுமி
பிக் பாஸ் தனலட்சுமி கதறி அழுது வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

பிக் பாஸ் தனலட்சுமி
பிக் பாஸ் 6 ஆவது சீசனில் டிவி மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் தவிர சாதாரண போட்டியாளர்ளும் கலந்து கொண்டனர்.
அவர்களில் ஒருவர் தான் ஈரோட்டைச் சேர்ந்தவர், தனலட்சுமி. டிக் டாக் செயலி மூலம் சர்ச்சைக்குரியவராக பிரபலமானார். இது தான் அவரை பிக் பாஸ் மேடை வரை அழைத்து சென்றது. பல போராட்டங்களை தாண்டி நிகழ்ச்சியில் ஒரு கட்டம் வரை நகர்ந்து வந்தார். இருப்பினும் டைட்டில் பட்டம் கிடைக்கவில்லை.
ஆனால் அவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் கிடைத்து இருக்கிறது. கிட்டதட்ட 70 நாட்கள் மேல் வரை நிகழ்ச்சியில் நீடித்தார்.