இந்த வார டாப் 10 சீரியல்கள் என்ன? மக்கள் ஆதரவு யாருக்கு? வெளியானது ஃபுல் டேட்டா!
இந்த வாரம் வெளியான தமிழ் சீரியல்களில் மக்கள் மனதைக் கவர்ந்த டாப் 10 சீரியல்கள் எது என்ற பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.
திரைப்படங்களைக் காட்டிலும் அதிகமான இல்லத்தரசிகளை ரசிகர்களாக கொண்டது டிவி சீரியல்கள்தான். ஒவ்வொரு சீரியலும் அதன் கதை, கதாபாத்திரங்களின் அமைப்பு, நடிகர்களின் நடிப்புத் திறன் ஆகியவற்றால் மட்டுமே சிறப்பு பெறுகின்றன.
இவை அனைத்தும் சரியாக இருந்து ஒரு நேர்த்தியான படைப்பாக இருந்தால் மட்டுமே மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. தமிழ் சீயல்களுக்கான சேனல்களை பொறுத்த வரை, சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி ஆகிய சேனல்கள் முன்னணி வகிக்கின்றன. இதில் ஓடும் பிரைம் டைம் சீரியல்களே அதிகம் பேரால் பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு வாரமும் டிவி சீரியல்கள் எந்த அளவுக்கு ஓடியுள்ளது என டி.ஆர்.பி ரேட்டிங் வெளியாகும். கடந்த வாரம் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட சீரியல் மக்கள் மத்தியில் பெற்ற வரவேற்புகளின் அடிப்படையில் டிஆர்பி புள்ளிப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில், முதல் 10 இடங்களைப் பெற்ற சீரியல்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.
தொடர்ந்து முதலிடத்தில் கயல்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் கயல். இந்த சீரியலில் பலகட்ட போராட்டத்திற்கு பின் தன் தாயின் உண்மை முகத்தை அறியும் எழில் இனி என்ன செய்வார் என்ற பரபரப்பான சூழலில் சீரியல் செல்வதால் அடுத்து என்ன நடக்கும் என்பதைக் காண மக்கள் விறுவிறுப்பாக உள்ளனர். இதனால், இது டிஆர்பி பட்டியலில் 9.95 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.
சிங்கப்பெண்ணே சீரியல்
சன் டிவி சீரியலான சிங்கப்பெண்ணேவில், தன் அக்காவின் திருமண செலவுகளுக்காக உடைந்த கையுடன் சூழ்ச்சிகளுக்கும் ஆதரவுகளுக்கும் மத்தியில் போராடி வருகிறார் ஆனந்தி. இதனால் இந்த சீரியலைக் காண மக்கள் ஆர்வமாக இருந்த நிலையில், இந்த சீரியல் 9.92 புள்ளிகள் பெற்று டிஆர்பியில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
மூன்று முடிச்சு
சன் டிவி சீரியலான மூன்று முடிச்சு சீரியலலில், தன்னை மீறி நடந்த கல்யாணத்தை ஏற்கமுடியாமல் தவிக்கும் கதாநாயகனின் அம்மா திட்டங்கள் நிறைவேறியதா, கதாநாயகனின் அடுத்த முடிவு என்ற சீரியஸான கட்டத்தில் சீரியல் செல்வதால் இது 9.63 புள்ளிகளுடன் 3ம் இடத்தில் உள்ளது.
மருமகள்
சன் டிவியில், கல்யாணம் முடிந்த உடன் தனிக்குடித்தனம் போக நினைக்கும் ஹீரோ, அதை எதிர்க்கும் ஹீரோயின் என்ற கோணத்தில் செல்லும் மருமகள் சீரியல் டிஆர்பியில் 9.95 புள்ளிகளைப் பெற்று 4ம் இடத்தில் உள்ளது.
ராமாயணம்
ராமனுக்கும், ராவணனுக்கும் நடக்கும் யுத்தம் மக்களை கவர்ந்து இழுத்த நிலையில், ராமாயணம் சீரியல் டிஆர்பியில் 8.65 புள்ளிகள் பெற்று 5ம் இடத்தில் உள்ளது.
அன்னம்
தாயை இழந்து, தந்தையின் ஆதரவு இன்றி ஒற்றை ஆளாய் குடும்ப பாரத்தை சுமந்து வரும் அன்னம் சன் டிவிக்கு புது வரவாக இருந்தாலும் தாய் மாமன் பாசம், அத்தையின் வெறுப்பு என பரபரப்பாக செல்வதால் டிஆர்பியில் 8.58 புள்ளிகளை பெற்றதால் 6ம் இடத்தை பிடித்துள்ளது.
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல், புது வீடு, திருட்டு கும்பல் என்ற கதையுடன் சென்று டிஆர்பியில் 7.65 புள்ளிகள் பெற்று 7ம் இடம் பெற்றுள்ளது.
பாண்டியன் ஸ்டார்ஸ் 2
விஜய் டிவி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் பாட்டி பேரன் பாசம், வேலைக்கு செல்லாமல் ஏமாற்றும் மருமகள் போன்ற பரபரப்பான கதையால் டிஆர்பியில் 6.61 புள்ளிகளைப் பெர்று 8ம் இடத்தில் உள்ளது.
பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒரு காலத்தில் செக்கைபோடு போட்ட பாக்கியலட்சுமி சீரியல் நீண்ட நாட்களுக்குப் பின் டிஆர்பி பட்டியலில் தன்னை தக்க வைத்து வருகிறது. இந்த சீரியலில் கோபி நெஞ்சுவலி வந்த பின் பாக்கியாவிற்கு செய்த கொடுமைகளை எண்ணி வருந்தி அவருடன் நட்பாக பழக முயல்கிறார், இதனால் அவர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்களா என ரசிகர்கள் எதிர்பார்ப்பதால் டிஆர்பியில் 6.28 புள்ளிகள் பெற்று 9ம் இடத்தில் உள்ளது
அண்ணா
ஜீ தமிழில் வெளியாகும் அண்ணா சீரியலில் சௌந்தரபாண்டியின் திட்டங்களை சமாளித்து தன் குடும்பத்தின் பிரச்சனைகளை தீர்த்து வரும் ஷண்முகத்தை மக்களுக்கு பிடித்துப் போனதால் டிஆர்பியில் 65.79 புள்ளிகள் பெற்று 10 இடத்தில் உள்ளது.
டாபிக்ஸ்