தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Cooku With Comali Chef Venkatesh Bhat Says I Am Not Part Of Cwc New Season 5

CWC Venkatesh Bhat: சமையலில் கண்டிப்பு.. ஜாலிக்கு கேரண்டி.. ஆனா.. குக் வித் கோமாளி வெங்கடேஷ் பட் அதிர்ச்சி முடிவு!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 24, 2024 01:18 PM IST

சமையலில் கண்டிப்பாக இருக்கும் இவர்கள் போட்டியாளர்களுடன் அடிக்கும் லூட்டிகள் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கின்றன.

குக் வித் கோமாளி!
குக் வித் கோமாளி!

ட்ரெண்டிங் செய்திகள்

சமையலில் கண்டிப்பாக இருக்கும் இவர்கள் போட்டியாளர்களுடன் அடிக்கும் லூட்டிகள் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கின்றன. 

கிட்டத்தட்ட 4 சீசன்களை நிறைவு செய்த இந்த நிகழ்ச்சி தற்போது தன்னுடைய 5 ஆவது சீசனை நோக்கி நகர்கிறது. இந்த நிலையில் இந்த சீசனிலும் ஏற்கனவே நடுவர்களாக இருந்தவர்களே நடுவர்களாக இருப்பார்கள் என்ற தகவல் உலாவிக்கொண்டிருந்தன. இந்த நிலையில் அதனை வெங்கடேஷ் பட் மறுத்து இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில் , “ கடந்த சில மாதங்களாக குக் வித் கோமாளி சீசன் 5 -ல் நான் நடுவராக தொடர்கிறேன் என்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த வாய்ப்பின் வழியாக அதனை தெளிவுபடுத்தி விடுகிறேன். 

நான் அந்த நிகழ்ச்சியில் நடுவராக தொடரவில்லை. லட்சக்கணக்கான மக்களையும், என்னையும் மகிழ்ச்சிபடுத்திய அந்த அழகான நிகழ்ச்சியில் இருந்து நான் பிரேக் எடுக்க இருக்கிறேன். 

குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்னுடைய நிஜமான ஜாலியான பக்கத்தை காண்பித்தது. அது எனக்கு செளகரியமாகவும், நான் நானாக இருப்பதற்கும் வழிவகுத்தது.

கடந்த 24 வருடங்களுக்கு மேலாக நான் இந்த சேனலுடன் தொடர்பில் இருந்திருக்கிறேன். இந்த தருணத்தில் நான் என்னுடைய பிற வாய்ப்புகளில் கவனம் செலுத்தும் வகையில், இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறு கிறேன். இந்த முடிவு மிகவும் கடினமான ஒன்றுதான். ஆனால் நான் இன்னொரு வித்தியாசமான கான்செப்ட்டில் உங்களை மகிழ்ச்சிப்படுத்த இன்னொரு மேடையில் உங்களை சந்திக்கிறேன். நன்றி.” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்