Puliyur Saroja: ‘ஷாக் அடித்தது தெரியாமல் கமலிடம் ஒன்ஸ்மோர்’ புலியூர் சரோஜா!
‘செக்ஸி சாங் தான், ஆனால் அதை அவ்வளவு நேக்காக எடுத்தேன். இன்று கூட அந்த பாடல் குறித்து இயக்குனரிடம் பேசுவேன்’-புலியூர் சரோஜா
கடந்த தலைமுறை நடிகர்கள் அனைவரையும் ஆட்டம் போட வைத்தவர், 80களில் திரையில் ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தவர் நடன இயக்குனர் புலியூர் சரோஜா. இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த சுவாரஸ்ய பேட்டி இதோ:
கமலின் எனக்குள் ஒருவன் படத்தில் ‘மேகம் கொட்டட்டும்’ பாடலுக்கு குடையை வைத்துக் கொண்டு ஆடலாம் என்று நான் கூறினேன். கையை அசைத்து ஆடலாமே என்று இயக்குனர் கூறினார். அப்போது கமல் வந்து, ‘மாமியார் சொல்றாங்க, அவங்க விருப்பத்திற்கே பண்ணட்டும் விடுங்க’ என்று கூறிவிட்டார்.
ஷூட் எடுத்துக் கொண்டிருந்தோம், திடீரென கமல் அழைத்தார். ‘மாமியாரே இங்கே வா…’ என்றார். நானும் போனேன். அவர் அருகில் சென்றால், தரையில் ஷாக் அடிக்கிறது. ‘இப்போ தெரியுதா, அங்கே நின்னுட்டு, ஒன்மோர் கேட்டுட்டே இருக்கீங்க… இங்கே பாருங்க பொண்ணுங்க எவ்வளவு கஷ்டப்படுறாங்கனு’ என்று கமல் சொன்னார்.
‘அய்யய்யோ… ஸாரி மருமகனே…’ என்றேன். ‘அட நீங்க வேற… சும்மா சொன்னே மாமியரே… வேலை தான் நமக்கு முக்கியம், நீங்க ஆக்ஷன் சொல்லுங்க’ என்று கமல் கிண்டலடித்தார். வேலை என்று வந்துவிட்டால், எந்த கலைஞரும் எனக்கு ஒத்துழைப்பு தராமல் இருந்ததில்லை.
சூரக்கோட்டை சிங்கக்குட்டி படத்தின் ஷூட். சில்க் நடித்தார். நம்பியார் உட்கார்ந்திருக்கார். அவர் முன், சில்க் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறார். ‘ஏய்… நம்பியார் உட்கார்ந்திருக்கிறார்’ என்றேன். ‘யாரு நம்பியார்…’ என்று கேட்கிறாள்.
‘அடியே… அவர் சீனியர்டி, அவர் முன்னாடி இப்படி உட்காரலாமா?’ என்று கேட்டேன். ‘ஏன்க்கா… என் கால் மேலே, கால் போட்டு உட்கார்ந்திருக்கேன், அவர் மேலேயா கால் போட்டுருக்கேன்?’ என்று சில்க் கேட்டாள். அப்புறம் அவளுக்கு புரிய வைத்தேன். அந்த அளவிற்கு சில்க் உடன் பழகி பழகி அவளுடன் நெருங்கினோம்.
நிலா காயுது நேரம் நல்ல நேரம் பாடல் எடுக்கும் போது, இயக்குனர் அவ்வளவு சிரமப்பட்டார். நான் எடுக்கும் சீன்கள், அவருக்கு ஒரே பயம். செக்ஸி சாங் தான், ஆனால் அதை அவ்வளவு நேக்காக எடுத்தேன். இன்று கூட அந்த பாடல் குறித்து இயக்குனரிடம் பேசுவேன்.
ராதிகாவின் முதல் படம் கிழக்கே போகும் ரயில் ஷூட். ஹூல்ஸ் போட்டு வந்த ராதிகா, ஒரே ராத்திரியில் எனக்கு இந்த படம் வேண்டாம் என பொட்டியை தூக்கிக் கொண்டு ஓட தயாரானார். கால் வலிக்குது ஆடமுடியவில்லை என்று அழுதார். அப்புறம் அவளை சமாதானம் செய்து நடிக்க வைத்தோம். அந்த அளவிற்கு ஸ்டெப் போட்டோம். மாஞ்சோலை கிளிதானோ பாடலுக்காக ராதிகாவை அந்த அளவிற்கு தயார் படுத்தினோம்.
பூவரசம்பூ பூத்தாச்சு பாடலுக்கு எப்படி வாய் திறக்க வேண்டும் என்பதை கூட ராதிகாவிற்கு நுணுக்கமாக சொல்லிக் கொடுத்தேன். அதனால் தான் புலியூர் சரோஜாவை எல்லாரும் விரும்பினார்கள்,’’
என்று அந்த பேட்டியில் புலியூர் சரோஜா கூறியுள்ளார்.
டாபிக்ஸ்