தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Cheyyaru Balu Latest Interview About How Car Accident Changed Ajith Kumar Life

Ajith Kumar: ஒரே விபத்து; முதுகில் ஆபரேஷன்;படப்பிடிப்பில் ஸ்பெஷல் பெட்; தயாரிப்பாளரிடம் கெஞ்சல்! - அஜித் ரணமான கதை!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 15, 2024 08:01 AM IST

அவருக்கு முதுகில் ஆபரேஷன் செய்யப்பட்டது அனைவருக்குமே தெரியும். அந்த சமயத்தில் அவர் அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போதுஅவர் நடித்து வெளியான திரைப்படங்களும் தோல்வியை சந்தித்தன. அவரது சூழ்நிலையில் வேறு யாரேனும் இருந்தால், சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கி இருப்பார்கள்.

அஜித்குமார்
அஜித்குமார்

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் பேசும் போது, “அமராவதி, வான்மதி, காதல் கோட்டை திரைப்படங்களுக்குப் பிறகு அஜித்திற்கு பல்வேறு விமர்சனங்கள் வந்தன. குறிப்பாக, இவர் என்ன தமிழ் பேசுகிறார். இவர் பேசும் தமிழே புரியவில்லை. படப்பிடிப்பு ஒன்றில், அஜித் வசனங்களை பேச, அது சரியாக புரியாத நிலையில், அந்தப்படத்தின் இயக்குனர் அதனை கிண்டலடித்தார். 

இதனைப்பார்த்த மொத்த படக்குழுவும் சிரித்தது; இதில் அஜித் முற்றிலுமாக உடைந்து போனார். இதையடுத்து அவருடைய அம்மா அவருக்கு ஆறுதல் தந்து உறுதி கொடுத்தார். அதன் பின்னர் அஜித் தொடர்ந்து தமிழை ஒழுங்காக பேச முயற்சி செய்து, செய்து ஒரு கட்டத்தில், சிங்கிள் டேக்கில் முழுமையாக தமிழை வசனங்களை ஒப்புவிக்கும் அளவுக்கு திறமையானவராக மாறினார்.

அவருக்கு முதுகில் ஆபரேஷன் செய்யப்பட்டது அனைவருக்குமே தெரியும். அந்த சமயத்தில் அவர் அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போதுஅவர் நடித்து வெளியான திரைப்படங்களும் தோல்வியை சந்தித்தன. அவரது சூழ்நிலையில் வேறு யாரேனும் இருந்தால், சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கி இருப்பார்கள்.

ஆனால் அஜித் நாம் ஜெயித்தே தீர வேண்டும் என்று பிடிவாதமாக முயற்சிகளை எடுத்துக் கொண்டிருந்தார். ராஜ்கபூர் இயக்கிய அவள் வருவாளா திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடித்துக்கொண்டே இருப்பார்… திடீரென்று டைரக்டர் சார் என்று இயக்குநரை கூப்பிடுவார்… அவர் அப்படி கூப்பிடுகிறார் என்றால் அவருக்கு உடம்பு வலிக்கிறது என்று அர்த்தம்.

இதனையடுத்து அவருக்காக அங்கு போடப்பட்டிருக்கும் ஸ்பெஷல் பெட்டில், கொஞ்ச நேரம் உட்கார்ந்து, ஓய்வெடுத்து விட்டு மீண்டும் வந்து நடிப்பார்.  திரும்பி வந்து கேமரா முன்பு நிற்கும் போது மீண்டும் பழைய அஜித் போல அவர் மாறி விடுவார்

ஆனந்த பூங்காற்றே திரைப்படத்தில் இவர் கமிட்டாகும் பொழுது உடம்பில் வலி அதிகமாகி விட்டது. அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  

இதனையடுத்து அந்த படத்தின் தயாரிப்பாளர் அஜித்தை விளம்பரத்திலிருந்து தூக்கினார். இதைக்கேட்டு பதறி அடித்து ஓடி வந்த அஜித், நீங்கள் அந்த முடிவை எடுத்தால், என்னுடைய வாழ்க்கையே போய்விடும் என்று கெஞ்சி, மீண்டும் அந்த வாய்ப்பை பெற்றார். ரஜினிக்கு பிறகு சினிமாவில் அதிகமான அவமானங்களை சந்தித்தவர் அஜித் குமார் தான்” என்று பேசினார். 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.