Vijay: விஜய்யின் முதல் மாநாடு நடக்குமா.. நடக்காதா.. வேகமில்லாமல் சுற்றும் புஸ்ஸி ஆனந்த்.. யார் தேவை?: செய்யாறு பாலு
Vijay: விஜய்யின் முதல் மாநாடு நடக்குமா.. நடக்காதா.. வேகமில்லாமல் சுற்றும் புஸ்ஸி ஆனந்த்.. யார் தேவை? என பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டியளித்துள்ளார்.
(1 / 6)
Vijay: தமிழக வெற்றிக் கழகத்துக்கு அனுபவம் வாய்ந்த அரசியல் கட்சியினர் இல்லை எனவும், விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டை எப்போது நடத்துவார் என்பது குறித்தும் மூத்த சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டியளித்துள்ளார்.இதுதொடர்பாக மூத்த சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு, தனது செய்யாறு பாலு ஆஃபிசியல் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ’’வரும் செப்டம்பர் 23ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக மாநாடு நடக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. காவல்துறையில் அனுமதி கேட்ட கடிதத்தில் குறிப்பிட்ட தேதியைத் தான் பலரும் வெளியில் வந்து சொல்லி வருகின்றனர். அதில் 21 கேள்விகள் கேட்கப்பட்டன. 33 நிபந்தனைகள் ஒதுக்கப்பட்டன. இதையெல்லாம், தாண்டி வரும் செப்டம்பர் 23ஆம் தேதி த.வெ.க. மாநாடு நடக்க வாய்ப்பே இல்லை.அதற்குக் காரணம். வெகுசில நாட்கள் தான் உள்ளன. சரி அக்டோபர் மாதம் நடக்குமா. அதற்கும் வாய்ப்பு இல்லை. ஏனென்றால், அக்டோபர் 3ஆம் தேதி தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு பையனூர் அல்லது திருப்போரூர் பகுதிகளில் நடக்கயிருக்கிறது.
(2 / 6)
தமிழக வெற்றிக் கழக மாநாடு எப்போது நடக்கும்?சரி, அக்டோபர் கடைசி வாரம் த.வெ.க மாநாடு நடக்குமா என்றால், அது சரியான மழைக்காலம். அடுத்த வருடம், தை மாதம் த.வெ.க. மாநாடு நடக்க வாய்ப்புள்ளது.விஜய்யின் பின்னணியில் இன்னும் அனுபவசாலியான அரசியல்வாதிகளை வைத்திருக்கவில்லையோ என்று தோன்றுகிறது. வெறும் புஸ்ஸி ஆனந்த் மட்டும் போதாது. குறிப்பாக, மூத்த முன்னாள் அமைச்சர்கள் விஜய்யுடன் இருந்தால் நல்லது. அதில் கூட, செஞ்சி ராமச்சந்திரனின் பெயர் தொடர்ச்சியாக அடிபட்டுக்கொண்டு இருந்தது. அதே சமயம், எடப்பாடி பழனிசாமி அவர் தங்கள் கட்சியில் தான் தொடர்ச்சியாக இருந்து வருகிறார் என்று சொல்லி வருகிறார்.
(3 / 6)
எம்.ஜி.ஆருக்கு ஆர்.எம்.வீரப்பன் என்னும் ஆர்.எம்.வீ:எம்.ஜி.ஆருக்கு மூத்த அரசியல்வாதிகள் சிலர் எப்போதுமே உடன் இருந்தனர். அவரும் அதை விரும்பினார். பரங்கிமலையில் வெற்றிபெற்றது முதல் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தது வரை, இது தொடர்ந்தது. குறிப்பாக, ஆர்.எம்.வீரப்பனின் நட்பு, எம்.ஜி.ஆருக்கு கை கொடுத்தது. எம்.ஜி.ஆருக்கு நாடகக் கம்பெனியில் இருந்தபோது இருந்து ஆலோசனைகள் கூறுவது, படத்தின் கதையைத் தேர்வு செய்து கொடுப்பது எனப் பல்வேறு பணிகளை ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆருக்குக் கூறினார்.காவல்காரன் படத்தின் கதையைப் பரிந்துரைக்கிறார், ஆர்.எம்.வீ.. ஆனால், இப்படத்துக்கு ஜெயலலிதா தான் சரியாக வருவார் என ஆர்.எம்.வீ நினைக்கிறார். ஆனால், எம்.ஜி.ஆர் சரோஜா தேவியைப் பரிந்துரைக்கிறார்.பட பூஜையும் நடத்தப்பட்டது. அதில், ஆர்.எம்.வீ பரிந்துரைத்த ஜெயலலிதாவுக்குப் பதிலாக சரோஜா தேவி, படபூஜையில் கலந்துகொண்டார். அதில் கோபமாகி விடுகிறார், ஆர்.எம்.வீ. அதன்பின், எம்.ஜி.ஆருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார், ஆர்.எம்.வீ. இதனால், கோபம் ஆகிவிடுகிறார், எம்.ஜி.ஆர்.
(4 / 6)
இருந்தாலும், கட்சியின் பிரசாரக்கூட்டங்களை ஒருங்கிணைப்பதில் ஆர்.எம்.வீ. மிகப்பெரிய பணிகளை எம்.ஜி.ஆருக்காக செய்கிறார். அப்போது அந்த மேடையில் பேசும் எம்.ஜி.ஆர். ‘காவல் காரன்’ படத்தின் தாமதத்துக்குத் தான் தான் காரணம் எனக் கூறி மன்னிப்புக் கேட்கிறார்.படம் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியது. எம்.ஜி.ஆர் உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்கா சென்றபோது, அவர் காலமாகிவிட்டார். அது பொம்மை என்று எல்லாம் செய்திகள் வதந்திகளாகப் பரவின. அப்போது அமெரிக்கா சென்ற ஆர்.எம்.வீரப்பன், அவர் தொப்பி போடாத யதார்த்தமாக இருக்கும் போட்டோ மற்றும் எம்.ஜி.ஆர் இரட்டை இலையைக் காட்டும் சில நிமிட வீடியோவை எடுத்து, தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்து காட்டுகிறார். அது எம்.ஜி.ஆர். மீது மக்களுக்கு அனுதாபத்தைத் தருகிறது. அடுத்த தேர்தலில் அவர் களத்தில் நிற்காமலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெறுகிறார். அப்படிப்பட்ட அனுபவம் கொண்ட நபரை விஜய் ஏன் தேடக்கூடாது. அப்படிப்பட்ட நபரை விஜய் ஏன் அருகில் வைத்துக்கொள்ளக்கூடாது.
(5 / 6)
விஜயகாந்துக்கு பக்கபலமாக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன்:விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கைக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் மிகப்பெரிய தூண். பண்ருட்டி ராமச்சந்திரன் எம்.ஜி.ஆருக்கும் விஜயகாந்துக்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தை ஒரு பேட்டியில் கூறுகிறார். அதில் எம்.ஜி.ஆர். பல ஆலோசனைகள் கேட்டுவிட்டு, தன் கருத்தில் இருந்து பின்வாங்கமாட்டார். விஜயகாந்த் அப்படி கிடையாது என்று கூறுகிறார். மேலும் எம்.ஜி.ஆர். தன் மனைவியை அரசியல் மேடைகளில் ஏற்றியது கிடையாது என்கிறார். அதைவிட, சட்டப்பேரவையில் விஜயகாந்த், ஜெயலலிதாவை எதிர்த்துப் பேசக்கூடாது என்று சொன்னதாகவும், அதை விஜயகாந்த் கேட்கவில்லை என்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியிருக்கிறார்.இது தே.மு.தி.க.வுக்கு மிகப்பெரிய பின்னடைவினைத் தருகிறது. எதிர்கால கூட்டணி வாய்ப்பு இல்லாமல் போகிறது.
(6 / 6)
ஆனால், களப்பணி ஆற்றுவதில் மக்களைச் சந்திப்பதில் விஜயகாந்த் சலிப்பைக் காட்டமாட்டார். இந்தப் பண்பு, விஜயகாந்த், எம்.ஜி.ஆருக்கு நிகரானவராகத் தான் இருந்தார்.விஜய்க்கு அப்படிப்பட்ட ஒரு நபர் தேவை. அது செஞ்சி ராமச்சந்திரனோ வேறு யாரோ, சில அனுபவசாலிகள் நிச்சயம் விஜய்க்கு தேவை. இதனால் விஜய் எப்படி, தன்னை அரசியலுக்குள் நிலைநிறுத்துவார் என்று தெரியவில்லை. தளபதி 69 படமும் அடுத்த வருடம் அக்டோபர் வரை நடக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே த.வெ.க முதல் மாநாடு ஜனவரியில் நடந்தே தீரும்’’ என மூத்த சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.நன்றி: செய்யாறு பாலு யூட்யூப் சேனல்
மற்ற கேலரிக்கள்