OTT Kids Movies : குழந்தைகளுக்கு லீவு விட்டா இனி கவலைய விடுங்க.. ஓடிடி-யில் இந்த மூவி போடுங்க.. அமைதியா பாப்பாங்க!-check out the must see movies for kids on ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ott Kids Movies : குழந்தைகளுக்கு லீவு விட்டா இனி கவலைய விடுங்க.. ஓடிடி-யில் இந்த மூவி போடுங்க.. அமைதியா பாப்பாங்க!

OTT Kids Movies : குழந்தைகளுக்கு லீவு விட்டா இனி கவலைய விடுங்க.. ஓடிடி-யில் இந்த மூவி போடுங்க.. அமைதியா பாப்பாங்க!

Divya Sekar HT Tamil
Sep 10, 2024 09:10 AM IST

OTT Kids Movies : ஓடிடி-யில் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் உள்ளது, ஆனால் நாம் விரும்பும் படங்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் கண்டுபிடிப்பது எளிதல்ல. குறிப்பாக குழந்தைகள் படங்களில் நிறைய குழப்பங்கள் உள்ளன. இப்போது குழந்தைகள் மட்டுமல்ல, அவர்களுடன் அமர்ந்து நீங்களும் ஓடிடியில் இந்தப் படங்களைப் பார்க்கலாம்.

OTT Kids Movies : குழந்தைகளுக்கு லீவு விட்டா இனி கவலைய விடுங்க.. ஓடிடி-யில் இந்த மூவி போடுங்க.. அமைதியா பாப்பாங்க!
OTT Kids Movies : குழந்தைகளுக்கு லீவு விட்டா இனி கவலைய விடுங்க.. ஓடிடி-யில் இந்த மூவி போடுங்க.. அமைதியா பாப்பாங்க!

ஆன்வர்டு (Onward)

ஆன்வர்டு ஒரு சாகச திரைப்படம். இது ஒரு உணர்வுபூர்வமான பயணமும் கூட. இப்படம் உடன்பிறப்புகளின் பிணைப்பையும் குடும்பத்தின் வலிமையையும் எடுத்துக்காட்டுகிறது. இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் கிடைக்கிறது.

தி பாஸ் பேபி (The Boss Baby)

2017ஆம் ஆண்டு வெளியான தி பாஸ் பேபி படம் முழுக்க முழுக்க குழந்தையின் பாசப்போராட்டத்தை மையப்படுத்தி நகைச்சுவை உணர்வோடு எடுக்கப்பட்ட அட்டகாசமான அனிமேசன் படம்.டாம் மெக்ரத் இந்த படத்தினை இயக்கியுள்ளார். அப்பா, அம்மா, மகன் என மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் வீட்டில் எங்கிருந்தோ வரும் குழந்தை அவர்களின் பாசத்தை பெறுகையில், 7 வயது சொந்த மகனுக்கு ஏற்படும் ஏக்கத்தையும், கோபத்தையும் நகைச்சுவையோடு சொல்லும் இந்த அனிமேஷன் படத்தை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தலத்தில் பாருங்க. குழந்தைகள் விரும்பி பார்ப்பார்கள்.

தி பர்சூட் ஆஃப் ஹேப்பினஸ் (The Pursuit of Happyness)

இது ஒரு எழுச்சியூட்டும் உண்மைக் கதை. இந்த படம் ஒரு தந்தையின் போராட்டங்களையும் அவரது மகனுக்கு ஒரு சிறந்த வாழ்க்கையை உருவாக்க அவர் பெற்ற கஷ்டங்களையும் விவருக்கும். இப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் கிடைக்கிறது.

லியோ (leo)

இந்த படம் 2023ஆம் ஆண்டு வெளியான லியோ படம் அனிமேசன் படமாகவும் அதேநேரத்தில் அட்வென்சர் படமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மையக் கதாபாத்திரமாக லியோ என்ற பல்லிவகையைச் சார்ந்த ஓணான் உள்ளது. குடும்பத்துடனே இந்த படத்தைப் பார்க்கலாம். 70 வயதைக் கடந்த லியோ தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை வகுப்பறையிலேயே கழித்து விட்டதால், வெளியுலகைச் சுற்றிப் பார்க்க வருகின்றது. அப்போது நடப்பதை கற்பனையாக படமாக்கியுள்ளனர். படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் உள்ளது.

டூலிட்டில் (Dolittle)

இது பார்வையாளர்களை ஒரு புதிய கற்பனை உலகத்திற்கு அழைத்துச் செல்லும் படம். அற்புதமான சாகசத்துடன், இது விலங்கு இராஜ்ஜியத்தை முன்னணிக்குக் கொண்டுவருகிறது. இந்த படம் அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கக் கிடைக்கிறது.

மினியன்ஸ் (Minions)

மினியன்ஸ் உலகின் பலரின் மனதை கவர்ந்த படம் என்று சொல்லலாம் மேலும் இந்த படம் மூன்று பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது உலகில் மினியன்ஸ் தோன்றிய பின்னர் தன்னை விட பலசாலியை பாஸாக தேர்வு செய்து பணிவுடை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் டைனோசரை முதலில் பாஸாக தேர்வு செய்து, பின்னர் மனிதனை தேர்வு செய்கிறது. அதன் பின்னர் அவர்கள் எதிர்கொள்வதை நகைச்சுவையுடன் சொல்லும் படம் தான் மினியன்ஸ். இந்த படத்தை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் பாருங்க.

ஒரியன் அண்ட் டார்க் (Orion and the Dark)

பூனை, பூச்சி, நாய் என பார்த்தாலும் பயப்படும் சிறுவன் ஓரியனுக்கு இரவின் உருவமாக இருக்கக்கூடிய டார்க் உதவி செய்கிறது. இவனது பயத்தைப் போக்க இரவின் உருவமாக இருக்கக்கூடிய டார்க் உதவி செய்கின்றது. இந்த கதையை காமெடியாவும் அட்வென்சராகவும் இந்த படத்தை இயக்கியிருப்பார் ஷேன் சர்மார்ட்ஸ். இப்படம் நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் உள்ளது.

ஸ்டார் கேர்ள் (Star Girl)

ஸ்டார் கேர்ள் என்பது சுதந்திரமாக நிற்கும் ஒரு பெண்ணின் கதை. இந்த திரைப்படத்தை டிஸ்னி பிளஸ், ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைமில் பார்க்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.