Tamil Movies : இதயம், வருத்தப்படாத வாலிபர் சங்கம், முத்து சிப்பி என இன்றைய தேதியில் வெளியான படங்கள் லிஸ்ட் இதோ!-check out the list of tamil movies released on september 6 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Movies : இதயம், வருத்தப்படாத வாலிபர் சங்கம், முத்து சிப்பி என இன்றைய தேதியில் வெளியான படங்கள் லிஸ்ட் இதோ!

Tamil Movies : இதயம், வருத்தப்படாத வாலிபர் சங்கம், முத்து சிப்பி என இன்றைய தேதியில் வெளியான படங்கள் லிஸ்ட் இதோ!

Divya Sekar HT Tamil
Sep 06, 2024 07:34 AM IST

Tamil Movies Released on Sep 6: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், பிரபு மற்றும் சத்யராஜ் இணைந்து நடித்த சிவசக்தி உள்ளிட்ட செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியான படங்களின் லிஸ்டை பார்க்கலாம்.

Tamil Movies : இதயம், வருத்தப்படாத வாலிபர் சங்கம், முத்து சிப்பி என இன்றைய தேதியில் வெளியான படங்கள் லிஸ்ட் இதோ!
Tamil Movies : இதயம், வருத்தப்படாத வாலிபர் சங்கம், முத்து சிப்பி என இன்றைய தேதியில் வெளியான படங்கள் லிஸ்ட் இதோ!

இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சத்யராஜ் மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்சு நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர். இதன் இசையமைப்பாளர் இமான் ஆவார்.

சிவசக்தி

28 Years Of Sivasakthi: தனக்கென தனித்தனி மார்க்கெட் வைத்திருந்த இரண்டு நடிகர்கள் நடித்து வெளியான திரைப்படம் தான் சிவசக்தி. நடிகர் பிரபு மற்றும் நடிகர் சத்யராஜ் இணைந்து நடித்த திரைப்படம் இது. இவர்கள் இரண்டு பேருக்கும் தனித்தனி மிகப்பெரிய மார்க்கெட் இருந்தாலும் இருவரும் சேர்ந்து நடித்த திரைப்படங்கள்.

இதற்கு முன்பு பல்வேறு திரைப்படங்களில் இவர்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள். இருப்பினும் சத்யா, பாட்ஷா உள்ளிட்ட மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா இவர்கள் இருவரையும் வைத்து சிவசக்தி என்ற ஹிட் படத்தை கொடுத்தார். சிவசக்தி திரைப்படம் இன்றுடன் வெளியாகிய 28 ஆண்டுகள் ஆகின்றன.

இதயம்

காதல் படங்களுக்கு தனி இலக்கணம் வகுத்த முரளியின் திரைப் பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது ‘இதயம்’. காதலை கடைசி வரை சொல்லாமலேயே கண்களில் தேக்கி வைத்து பண்பட்ட நடிப்பை வழங்கி இருப்பார் முரளி. இதயம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, வெறும் முரளியாக இருந்த இவர் ராஜ முரளியாக மாறினார்.

கிங்

கிங் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். சாலமோன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், சினேகா, வடிவேல், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு தீனா இசை அமைத்தார்.

முத்து சிப்பி

Muthu Chippi : முத்துச் சிப்பி 1968 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதியன்று வெளிவந்த திரைப்படமாகும். எம். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர். திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடியது.அக்னி பரிக்சா என்ற பெயரில் இத்திரைப்படம் மறு ஆக்கம் செய்யப்பட்டது. எஸ். எம். சுப்பையா நாயுடு இசையில் கவிஞர் வாலி இத்திரைப்படத்திற்கான பாடல்களை எழுதினார்

இரு சகோதரிகள்

1957-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இரு சகோதரிகள். ஜெமினி கணேசன், சாவித்திரி, எம். என். நம்பியார் முதலியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

கதை

சரோஜா, லலிதா இரு சகோதரிகள். ஒருவருக்கொருவர் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பது அவர்கள் வழக்கம். இவர்களை ஒற்றுமைப்படுத்த முடியாமல் தாயார் இறந்துவிடுகிறாள். பஞ்சரத்தின பாகவதர் என்ற ஒரு நடன, சங்கீத ஆசிரியர் சகோதரிகளுக்கு உதவுகிறார். லலிதாவை காலேஜில் படிக்க சென்னைக்கு அனுப்புகிறார். சரோஜாவுக்கு பூபதியாபிள்ளை வீட்டில் வேலை வாங்கிக் கொடுக்கிறார்.

பூபதியாபிள்ளையின் மகன் டாக்டர் சுந்தரம் சிற்றன்னையின் கொடுமை தாங்காது வீட்டை விட்டு வெளியேற முற்படுகிறான். சரோஜா அவனைச் சமாதானப்படுத்தி வீட்டில் தங்க வைக்கிறாள். சுந்தரத்துக்கு சரோஜாவைத் தன் வாழ்க்கைத் துணையாக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டு அதற்கு முயற்சி செய்கிறான்.

சென்னைக்கு படிக்கச் சென்ற லலிதா அங்கு பணத்தைப் பறிகொடுக்கிறாள். வாசுதேவன் என்பவன் அவளுக்கு உதவுகிறான். ஆனால் அவன் அவளை ஏமாற்றி அவளை ஒரு குழந்தைக்குத் தாயாக்கிவிட்டு தப்பி விடுகிறான். லலிதா குழந்தையுடன் ஊருக்கு வந்து சரோஜாவிடம் செல்கிறாள். சரோஜா லலிதாவின் நிலையைக் கண்டு மானம் மரியாதையைக் காப்பாற்றத் தன் வேலையையும் சுந்தரத்தின் அன்பையும் துறந்து லலிதாவுடன் செல்கிறாள்.

சுந்தர் சரோஜாவைத் தேடி அலைகிறான். ஒரு நாள் சரோஜாவைக் கண்டு விட்டான். ஆனால் அவள் ஒரு குழந்தையைச் சீராட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு மனம் மாறி அந்த இடத்தை விட்டு அகன்று விடுகிறான். சரோஜா என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறாள். கடிதம் எழுதி பாகவதரை வரவழைக்கிறாள்.

லலிதாவைக் கெடுத்தவனைக் கண்டு பிடித்து அவளை அவனிடம் ஒப்படைக்க வேண்டும். சுந்தரத்துக்குத் தான் குற்றமற்றவள் என நிரூபிக்க வேண்டும். பாகவதரின் உதவியுடன் சரோஜா என்ன செய்தாள் என்பது தான் திரைக்கதை.

மாணிக்கம்

1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மாணிக்கம். ஆக்‌ஷன் நாடகத் திரைப்படமாகும். கே.வி.பாண்டியன் இப்படத்தை இயக்கினார்.

டி. சிவா தயாரித்தார். இப்படத்தில் ராஜ்கிரண் மற்றும் வனிதா விஜயகுமார் நடித்துள்ளனர். வினு சக்கரவர்த்தி மற்றும் காந்திமதி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இது 6 செப்டம்பர் 1996 அன்று வெளியிடப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.