Box office Today: துள்ளி எழும் ‘லப்பர் பந்து’.. நெஞ்சை உலுக்கும் நந்தன்.. அழ வைத்த மெய்யழகன்! - பாக்ஸ் ஆபீஸ் வசூல் இங்கே
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Box Office Today: துள்ளி எழும் ‘லப்பர் பந்து’.. நெஞ்சை உலுக்கும் நந்தன்.. அழ வைத்த மெய்யழகன்! - பாக்ஸ் ஆபீஸ் வசூல் இங்கே

Box office Today: துள்ளி எழும் ‘லப்பர் பந்து’.. நெஞ்சை உலுக்கும் நந்தன்.. அழ வைத்த மெய்யழகன்! - பாக்ஸ் ஆபீஸ் வசூல் இங்கே

Kalyani Pandiyan S HT Tamil
Sep 30, 2024 02:44 PM IST

Box office Today: கோட், மெய்யழகன், நந்தன், லப்பர் பந்து, கடைசி உலகப்போர் உள்ளிட்ட திரைப்படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூலை இங்கே பார்க்கலாம்!

Box office Today: துள்ளி எழும் ‘லப்பர் பந்து’.. நெஞ்சை உலுக்கும் நந்தன்.. அழ வைத்த மெய்யழகன்! - பாக்ஸ் ஆபீஸ் வசூல் இங்கே
Box office Today: துள்ளி எழும் ‘லப்பர் பந்து’.. நெஞ்சை உலுக்கும் நந்தன்.. அழ வைத்த மெய்யழகன்! - பாக்ஸ் ஆபீஸ் வசூல் இங்கே

லப்பர் பந்து

தமிழ் சினிமாவில் கிரிக்கெட்டை மையமாக வைத்து பல படங்கள் வெளியாகி உள்ளது. ஆனால், அவை அனைத்தும் வெற்றி பெற்றதா? என கேள்வி எழுப்பினால், பதில் சொல்வது சந்தேகம் தான். அதே போல் ஒரு சில கிரிக்கெட் படங்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ரிலீஸாகி ஹிட்டான வரலாறும் இருக்கிறது.

அந்த வகையில் பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் வெளியான சமீபத்திய ரிலீஸ் லப்பர் பந்து. இந்தத் திரைப்படம் வெளியாகி இந்திய அளவில் 14.1 கோடி வசூல் செய்த நிலையில், 15.03 கோடி ரூபாய் உலகளவில் கோடி ரூபாய் வசூல் செய்து இருக்கிறது.

முதலில் இப்படத்திற்கு தமிழ்நாட்டில் 200 திரையரங்குகள் மட்டுமே ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் ரசிகர்களிடம் கிடைக்கும் வரவேற்பால் படிபடியாக உயர்ந்து 300 திரையரங்குகளில் தற்போது ஒடிக் கொண்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

நந்தன்

தமிழ்நாட்டில் பலரும் படித்து முன்னேறி சமூக பாகுபாடுகளை கடந்து வருகின்றனர். ஆனால், ஒருபுறம் எத்தனை நாகரிக மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், இன்னமும் சிந்தனையிலும் ரத்தத்திலும் சாதிய பாகுபாடுகள் ஊறிப்போய் உள்ளனர். அவர்கள் அனைத்து மனிதர்களையும் சமமாக பார்க்க பழகுவதே இல்லை.அத்துடன் வரும் தலைமுறையினரையும் பழக விடுவதில்லை.

இந்தக் கருத்தை மையமாக வைத்து வெளியான திரைப்படம் நந்தன். இரா.சரவணன் இயக்கிய இந்த திரைப்படத்தின் நாயகனாக சசிகுமார் நடித்திருந்தார். ‘நந்தன்’ திரைப்படம் வெளியாகி நேற்றோடு இந்திய அளவில் 1.03 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், உலகளவில் 1.14 கோடி ரூபாய் வசூல் செய்து இருக்கிறது.

ஹிப்ஹாப் ஆதி கடைசி உலகப்போர்

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்து வெளியான திரைப்படம் ‘கடைசி உலகப்போர் ’. இந்தத்திரைப்படம் இந்திய அளவில் 3.75 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், உலகளவில் 4.63 கோடி ரூபாய் வசூல் செய்து இருக்கிறது.

கோட்

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியான ‘கோட்’ திரைப்படம் உலகளவில் 449.35 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கும் நிலையில், இந்திய அளவில் 293.35 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.

மெய்யழகன்:

'96' பட புகழ் சி பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் மெய்யழகன். இப்படம் செப்டம்பர் 27 அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல பெயரை பெற்று வருகிறது.மெய்யழகன் திரைப்படம் இந்திய அளவில் 9. 75 கோடி ரூபாயும், உலகளவில் 10.75 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருக்கிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.