Box office Today: ‘விஜய்க்கே டஃப் கொடுக்கும் வாழை’ - ‘தி கோட்’, ‘வாழை’, ‘சரிபோதா சனிவாரம் படங்களின் வசூல் விபரம்-box office today thalapathy vijay the goat mari selvaraj vaazhai nani saripodhaa sanivaaram thangalaan box office - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Box Office Today: ‘விஜய்க்கே டஃப் கொடுக்கும் வாழை’ - ‘தி கோட்’, ‘வாழை’, ‘சரிபோதா சனிவாரம் படங்களின் வசூல் விபரம்

Box office Today: ‘விஜய்க்கே டஃப் கொடுக்கும் வாழை’ - ‘தி கோட்’, ‘வாழை’, ‘சரிபோதா சனிவாரம் படங்களின் வசூல் விபரம்

Kalyani Pandiyan S HT Tamil
Sep 13, 2024 03:22 PM IST

Box office Today: ‘தி கோட்’, ‘வாழை’, ‘சரிபோதா சனிவாரம்’ படங்கள் தொடர்பான பாக்ஸ் ஆபீஸ் நிலவர தகவ்ல்களை இங்கே பார்க்கலாம்.

‘தி கோட்’, ‘வாழை’, ‘சரிபோதா சனிவாரம் படங்களில் வசூல் விபரம்
‘தி கோட்’, ‘வாழை’, ‘சரிபோதா சனிவாரம் படங்களில் வசூல் விபரம்

 

கோட்
கோட்

நடிகர் விஜயின் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படமானது செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் மீனாட்சி சவுத்ரி, சிநேகா, பிரசாந்த், பிரபு தேவா, ஜெயராம், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில், இன்னொரு சார்பினர் படம் நன்றாகவே இருப்பதாக கூறுகின்றனர்.

வாழை
வாழை

வாழை திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்ற நிலையில், கோட் திரைப்படம் போட்டியாக வந்த போதும் பார்வையாளர்களை தியேட்டருக்குள் கொண்டு வந்து கொண்டுதான் இருக்கிறது. அதன் படி படம் வெளியான 21 வது நாளான நேற்றைய தினம் வாழைத்திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 0.16 கோடி ரூபாயை வசூல் செய்திருக்கிறது. மொத்தமாக தமிழகத்தில் இது வரை வாழைத்திரைப்படம் 27.33 கோடி வசூல் செய்த நிலையில், இந்தியாவில் 31.66 கோடி வசூல் செய்திருக்கிறது. உலகளவிலான வசூலை பார்க்கும் போது வாழைத்திரைப்படம் 36.41 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருந்த திரைப்படம் வாழை. சிறுவயதில் தான் சந்தித்த அனுபவங்களின் தொகுப்பை கதையாக மாற்றி, இந்தப்படத்தில் அவர் காட்சிகளாக வைத்து இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் இந்தப்படம், தற்போது மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

 

கொட்டுக்காளி
கொட்டுக்காளி

சூரியின் நடிப்பில் வெளியான கொட்டுக்காளித் திரைப்படம் நெகட்டிவான விமர்சனங்களை நிலையில், திரைப்படம் இந்தியாவில் 1.44 கோடி ரூபாயும், உலகளவில் 1.62 கோடி ரூபாயும் மட்டுமே வசூல் செய்திருக்கிறது.

விக்ரமின் தங்கலான் திரைப்படம் உலகளவில் 69.72 கோடியும், இந்தியாவில் 53.22 கோடி ரூபாய் மட்டும் வசூல் செய்திருக்கிறது.

 

நானி
நானி

விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘சரிபோதா சனிவாரம்’ திரைப்படம் ஆகஸ்ட் 29-ம் தேதி வெளியானது. பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்த இந்தத்திரைப்படம் இந்திய அளவில் 65.1 கோடி ரூபாயும், உலகளவில் 89. 25 கோடி ரூபாயும் வசூல் செய்திருக்கிறது. தெலுங்கில் கோட் திரைப்படம் தோல்வியை சந்தித்துள்ள காரணத்தால், ‘சரிபோதா சனிவாரம்’ படத்தின் வசூல் அதிகரித்திருப்பதாக திரைவட்டாரம் தெரிவிக்கிறது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.