Box office Today: வாழை, கொட்டுக்காளி, தங்கலான், டிமான்டி காலனி -2.. கோதாவில் ஜெயித்தது யார்? -வசூல் எவ்வளவு?
Box office Today: வாழை, கொட்டுக்காளி, தங்கலான், டிமான்டி காலனி படங்களின் வசூல் விபரங்களை இங்கே பார்க்கலாம்.

Box office Today: வாழை, கொட்டுக்காளி, தங்கலான், டிமான்டி காலனி -2.. கோதாவில் ஜெயித்தது யார்? -வசூல் எவ்வளவு?
வாழை வசூல் எவ்வளவு?
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வாழை. சிறுவயதில் தான் சந்தித்த அனுபவங்களின் தொகுப்பை கதையாக மாற்றி, இந்தப்படத்தில் அவர் காட்சிகளாக வைத்து இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் இந்தப்படம், தற்போது மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
Sacnilk தளம் வெளியிட்டு இருக்கும் தகவலின் படி, முதல் நாளில் 1.15 கோடி வசூல் செய்த வாழைத்திரைப்படம், இரண்டாவது நாளில் 2.50 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. தொடர்ந்து படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்த நிலையில், முதல் வார முடிவிலேயே 8.8கோடி வசூல் செய்தது. இந்த நிலையில், படம் வெளியான 7 வது நாளான நேற்று இந்தத்திரைப்படம் இந்தியாவில் 16.35 கோடி ரூபாயும், உலகளவில் 19.35 கோடி ரூபாயும் வசூல் செய்திருக்கிறது.