Box office today: வசூலை வாரிய வாழை; ஃப்ளாப்பான கொட்டுக்காளி; தேறியதா தங்கலான்; மிரட்டியதா டிமான்டிகாலனி-2- வசூல் விபரம்-box office mari selvaraj vaazhai demonte colony 2 vikram thangalaan soori kottukkaali box office collection on aug 27 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Box Office Today: வசூலை வாரிய வாழை; ஃப்ளாப்பான கொட்டுக்காளி; தேறியதா தங்கலான்; மிரட்டியதா டிமான்டிகாலனி-2- வசூல் விபரம்

Box office today: வசூலை வாரிய வாழை; ஃப்ளாப்பான கொட்டுக்காளி; தேறியதா தங்கலான்; மிரட்டியதா டிமான்டிகாலனி-2- வசூல் விபரம்

Kalyani Pandiyan S HT Tamil
Aug 27, 2024 04:37 PM IST

Box office today: வாழை, டிமான்டி காலனி, கொட்டுக்காளி, தங்கலான் படத்தின் வசூல் விபரம் சார்ந்த தகவல்களை பார்க்கலாம்.

Box office today: வசூலை வாரிய வாழை; ஃப்ளாப்பான கொட்டுக்காளி; தேறியதா தங்கலான்; மிரட்டியதா டிமான்டிகாலனி-2- வசூல் விபரம்
Box office today: வசூலை வாரிய வாழை; ஃப்ளாப்பான கொட்டுக்காளி; தேறியதா தங்கலான்; மிரட்டியதா டிமான்டிகாலனி-2- வசூல் விபரம்

Sacnilk தளம் வெளியிட்டு இருக்கும் தகவலின் படி, முதல் நாளில் 1.15 கோடி வசூல் செய்த வாழைத்திரைப்படம், இரண்டாவது நாளில் 2.50 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 4 கோடி ரூபாய் வசூல் செய்த இந்ததிரைப்படம் நேற்றைய தினம் 2.7 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. அதன்படி 4 நாட்களில் வாழைத்திரைப்படம் இந்தியாவில் 10.35 கோடி ரூபாயும், உலகளவில் 14.5 கோடி ரூபாயும் வசூல் செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

வாழை படத்தில் மாரிசெல்வராஜ்
வாழை படத்தில் மாரிசெல்வராஜ்

கொட்டுக்காளி திரைப்படம்

சூரியின் கொட்டுக்காளி திரைப்படம் வெளியான அன்றைய தினம் 0.42 கோடி ரூபாயும், இரண்டாவது நாளான சனிக்கிழமை 0.33 கோடியும் ரூபாயும் வசூல் செய்தது. இந்த நிலையில், மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை 0.29 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்த இந்ததிரைப்படம், நான்காம் நாளான நேற்று 0.11 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. ஆக மொத்தமாக இந்தியாவில் இதுவரை 1.15 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கும் கொட்டுக்காளி திரைப்படம், உலகளவில் 1.29 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது.

கொட்டுக்காளி திரைப்படம்
கொட்டுக்காளி திரைப்படம்

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம், நடிகை பார்வதி, நடிகை மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து, ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகி இருக்கும் திரைப்படம், தங்கலான். இந்தத் திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

தங்கலான் திரைப்படம்
தங்கலான் திரைப்படம்

இந்தியாவில், ஆகஸ்ட் 15 அன்று வெளியான தங்கலான் திரைப்படம் முதல் நாளில் 13 கோடி வசூல் செய்தது. ஆனால் படத்திற்கு வந்த கலவையான விமர்சனங்களால், அதன் வசூல் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. ஆக மொத்தமாக பார்க்கும் பொழுது, 12 நாட்களில் இந்தியாவில் 50.15 கோடி வசூல் செய்திருக்கும் தங்கலான் திரைப்படம், உலகளவில் 66.15 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.

டிமான்டி காலனி 2

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான திரைப்படம் டிமான்ட்டி காலனி 2. தங்கலான் திரைப்படத்திற்கு போட்டியாக வெளியான டிமான்டி காலனி 2 திரைப்படம், கடந்த வெள்ளிக்கிழமை 1.50 கோடி வசூலித்த நிலையில், சனிக்கிழமை ஆச்சரியமாக படத்தின் வசூலானது 60 சதவீதம் அளவுக்கு உயர்ந்து, 2.40 கோடி ரூபாய் வசூல் செய்தது.

 

டிமான்டி காலனி 2 திரைப்படம்
டிமான்டி காலனி 2 திரைப்படம்

இந்த நிலையில் நேற்றைய தினம் இந்தத்திரைப்படம் 1.1 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. ஆக மொத்தமாக பார்க்கும் போது டிமான்டி காலனி திரைப்படம் இந்திய அளவில் 34 கோடி ரூபாயும், உலகளவில் பார்க்கும் போது 40.25 கோடி ரூபாயும் வசூல் செய்திருக்கிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.