மது குடிக்க விடவில்லை.. மாடல் உடை அணிய விடவில்லை.. முதல் கணவர் என் அடையாளத்தையே அழித்தார்- கண்ணீர் விட்ட நடிகை
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மது குடிக்க விடவில்லை.. மாடல் உடை அணிய விடவில்லை.. முதல் கணவர் என் அடையாளத்தையே அழித்தார்- கண்ணீர் விட்ட நடிகை

மது குடிக்க விடவில்லை.. மாடல் உடை அணிய விடவில்லை.. முதல் கணவர் என் அடையாளத்தையே அழித்தார்- கண்ணீர் விட்ட நடிகை

Malavica Natarajan HT Tamil
Oct 21, 2024 02:55 PM IST

பாலிவுட் நடிகை நீலம் கோத்தாரி தனது முதல் திருமண வாழ்க்கை குறித்தும் அது அவருக்து தந்த வலிகள் குறித்தும் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

மது குடிக்க விடவில்லை.. மாடல் உடை அணிய விடவில்லை.. முதல் கணவர் என் அடையாளத்தையே அழித்தார்- கண்ணீர் விட்ட நடிகை
மது குடிக்க விடவில்லை.. மாடல் உடை அணிய விடவில்லை.. முதல் கணவர் என் அடையாளத்தையே அழித்தார்- கண்ணீர் விட்ட நடிகை

அவர் சிறு வயதிலேயே கீபோர்டு மற்றும் நடனம் கற்றுக் கொண்டது அவரின் நடிப்பிற்கும் உதவியது. தற்போது வெப் தொடர்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் நீலம் கோத்தாரி ஃபேபுலஸ் லைவ்ஸ் வெர்சஸ் பாலிவுட் வைவ்ஸ் எனும் தொடர் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில் அவர் தனது முதல் திருமணம், இரண்டாம் திருமணம், மகள் குறித்து பல கருத்துகளை உணர்வுப்பூர்வமாக பேசியுள்ளார்.

தொழிலதிபருடன் திருமணம்

சிறுவயதில் இருந்தே நடித்து வந்த இவர், 2000ம் ஆண்டில் லண்டனைச் சேர்ந்த தொழிலதிபர் நிர்மல் சேத்தியாவின் மகனான ரிஷி சேத்தியாவை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தில் தனக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக கூறினார்.

ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்

இதுகுறித்து பேசிய அவர், ரிஷி சேத்தியா என்னிடம் மாடலான உடைகளை உடுத்தக் கூடாது, பாரம்பரிய உடைகள் மட்டுமே அணிய வேண்டும் என்றார். அதற்கு சம்மதித்தேன். பின், அசைவ உணவுகளையும், மதுப் பழக்கத்தையும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றார் அதற்கும் சம்மதித்தேன்.

இதையடுத்து, எனக்கு பெரும் அடையாளத்தை கொடுத்த பெயரையும் மாற்றுமாறு கூறினார். அதையும் மாற்றி அவருடன் வாழ்ந்து வந்தேன். நான் வெளியில் சென்றாலோ, சூப்பர் மார்க்கெட் சென்றாலோ பலரும் என்னிடம் வந்து நீங்கள் நடிகை நீலமா என என்னிடம் விசாரிப்பார்கள். அவர்களிடம் இல்லை. நான் நடிகை கிடையாது என பலமுறை கூறியிருக்கிறேன்.

எனக்குள் எழுந்த கேள்வி

இதுபோன்ற செயல்கள் என்னை அழுத்தியது. இப்படி தன் அடையாளத்தை ஏன் மறைத்து வாழ வேண்டும். இதனால் யாருக்கு என்ன பயன் என தொடர்ந்து என்னுள் பல கேள்விகள் எழுந்தது. அதனால், நான் ரிஷி சேத்தியாவை விவாகரத்து செய்து பிரிந்து விட்டேன் என கண்ணீர் மல்க கூறினார்.

2ம் திருமணம்

இதன்பின் தான், நான் சமீர் சோனி என்பவரை காதலித்து 2011ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டேன் என்றார். இவர்கள் இருவரும் சேர்ந்து அஹானா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். மேலும், நீலம் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கவும் தொடங்கியதாக கூறினார்.

இந்நிலையில், தனத மகள் குறித்த கேள்விக்கு மிகவும் உணர்வுபூர்வமாக பதிலளித்தார். நாங்கள் எங்களது மகளிடம் எனது முதல் விவாகரத்து பற்றியோ, அவளை தத்தெடுத்தது பற்றியோ எதுவும் கூறவில்லை.

மகளின் கேள்வியால் இதயம் நின்றுவிட்டது

அப்படி இருக்கையில், அஹானா ஒருநாள் என்னிடம் வந்து நீங்கள் விவாகரத்து ஆனவரா என என்னைப் பார்த்து கேட்டாள். என் உயிர் அப்படியே நின்றுவிட்டது. அவளிடம் பேச முடியாமல் என் வார்த்தைகள் அனைத்தும் தடுமாறியது. எனக்கு என்ன சொல்வதென்றும் தெரியவில்லை. அப்போது, நான் அவளிடம் இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் எனக் கேட்டேன்.

அப்போது அவள், நீங்கள் பிரபலமான நடிகை. உங்கள் பெயரை கூகுள் செய்து பார்த்தால் என்ன வருகிறது என என் நண்பர்களோடு பார்த்தேன். அப்போது தான் இந்த செய்திகள் அனைத்தையும் படித்தேன் என்றார். மகள் அஹானாவின் இந்த வார்த்தைகளைக் கேட்டு என் இதயமே நொறுங்கியது போன்ற வலி உணர்ந்ததாக அவர் பேசி இருக்கிறார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.