Bob Marley Memorial Day: இறை நம்பிக்கைக் கொண்ட இசை போராளியின் நினைவு நாள் இன்று!
Bob Marley: பாப் மார்லி அதிகமான இறை நம்பிக்கை கொண்டவர் ஆவார். சைவ உணவையே விரும்புவார்.
இன்றளவும் இளைஞர்களின் டீ ஷர்ட்டுகளில், கீ செயின்களில் என பல இடங்களில் பாப் மார்லியின் புகைப்படத்தை நாம் பார்த்திருப்போம். பலருக்கு அவரது பெயர் கூட தெரியாது.
சுருள் சுருளாக இருக்கும் நீண்ட தலைமுடி, வாயில் புகையிலை, மென்மையான சிரிப்பு என இவரை பார்த்தால் எந்த இளைஞருக்குத்தான் பிடிக்காது.
மக்களுக்கான விடுதலையை, அன்பை ரெக்கே இசையின் வழியாக பாடிய பாப் மார்லி எனும் இசை போராளியின் நினைவு தினம் இன்று (மே 11). அவரைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
இசைக் கலைஞர் பாப் மார்லி ஜமைக்காவில் பிறந்தவர். நெஸ்டா ராபர்ட் மார்லி என்ற இயற்பெயருடைய இவர், இங்கிலாந்தைச் சேர்ந்த நார்வல் சிங்ளேர் மார்லி என்பவருக்கும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த செடெல்லா என்பவருக்கும் பிறந்தார்.
பாடல்களை எழுதுவதிலும் பாடுவதிலும் திறமை கொண்டவர். இளம் வயது முதலே சமூகத்தில் நிலவி வந்த அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் தனது பாடல்கள் வழியாக எதிர்த்து வந்தார்.
அன்பு ஒன்றே சிறந்தது என்பதை போதித்து வந்தார். தனது நண்பர்களுடன் இணைந்து வெய்லர்ஸ் என்ற இசைக்குழுவைத் தொடங்கி பல பாடல்களை உருவாக்கினார்.
இந்தக் குழுவினர் உருவாக்கிய பல பாடல்கள் உலகம் முழுவதும் இசை ரசிகர்களை ஈர்த்தது. இன்றளவும் ரசிகர்களால் அவரது இசை கொண்டாடப்பட்டு வருகிறது.
இறை நம்பிக்கைக் கொண்டவர்
பாப் மார்லி தனது 7 வயதிலேயே நண்பர்களின் கைரேகைகளைப் பார்த்து எதிர்காலத்தை கணித்து சொல்வாராம். பாப் மார்லி அதிகமான இறை நம்பிக்கை கொண்டவர் ஆவார். சைவ உணவையே விரும்புவார்.
ஆரம்ப நாட்களில் கத்தோலிக்க பிரிவில் இருந்த மார்லி, பின்னர் அதில் இருந்து பிரிந்து ராஸ்தஃபாரி (Rastafari) எனும் பிரிவில் இணைந்து கொண்டார். ராஸ்தஃபாரி பிரிவினர் தலை முடி வெட்டுவதில் நம்பிக்கை கொண்டவர்கள் இல்லை. அதனால் தான் அவரும் முடிவெட்டவில்லை.
ரீடா மார்லி என்பவரை திருமணம் செய்த கொண்ட பாப் மார்லி, 11 குழந்தைகளுக்கு தந்தை.
1976-ம் ஆண்டில் `ஸ்மைல் ஜமைக்கா' நிகழ்ச்சிக்கு சில நாள்களுக்கு முன் துப்பாக்கி ஏந்திய ஒருவர் பாப் மார்லியின் வீட்டுக்குள் நுழைந்து அவரது கையில் சுட்டார். எனினும், பாப் மார்லி காயத்துடன் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாப் மார்லி 36 வயதில் அமெரிக்காவின் அமெரிக்காவின் மியாமியில் காலமானார்.
டாபிக்ஸ்