Blue Sattai Maran: ‘சக்ஸஸ் மீட் என்றாலே ஃபிளாப் தான்..’ - விமர்சகர் ப்ளு சட்டை மாறனின் சர்ச்சை ட்விட்
Blue Sattai Maran Tweet: சக்ஸஸ் மீட் என்றாலே.. அது ஃப்ளாப் படமாக தான் இருக்கும் என்பதை உறுதியாக நம்பும் நிலை எப்போதோ ஏற்பட்டு விட்டது என்று ப்ளு சட்டை மாறனின் சர்ச்சை ட்விட் செய்து உள்ளார்.
திரைப்பட விமர்சகரும், இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன் எப்போது தனது சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பும் வகையில் எதாவதது பதிவுகள் வெளியிடுவதை வழக்கமாக வைத்து உள்ளார்.
அந்த வகையில் அவர் வெளியீட்டு இருக்கும் பதிவில், “ Kannur Squad, Kathal - The Core போன்ற படங்கள் உண்மையான வெற்றியை பெற்ற சில வாரங்கள் கழித்துதான் சக்ஸஸ் மீட் நிகழ்வை நடத்தினார் மம்முட்டி. தற்போது பிரம்மயுகம் படமும் பெரிய வெற்றி.
Premalu, Manjummel Boys படங்களும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. அவர்களும் இனிமேல்தான் சக்ஸஸ் மீட் நடத்தவுள்ளனர்.
இங்கே.. படம் ரிலீசான மறுநாளே கேக் வெட்டி சக்ஸஸ் மீட் கொண்டாடுவது பல ஆண்டு நடைமுறையாகி வருகிறது. மக்கள் இதையெல்லாம் பார்த்து சிரிக்கிறார்கள் என்பது தெரிந்தும்.. தொடர்ந்து இதை செய்து வருவது கொடுமை.
சக்ஸஸ் மீட் என்றாலே.. அது ஃப்ளாப் படமாக தான் இருக்கும் என்பதை உறுதியாக நம்பும் நிலை எப்போதோ ஏற்பட்டு விட்டது.
ஆகவே.. இதுபோன்ற கூத்துகளை தமிழ் திரையுலகம் உடனே நிறுத்துவது தான் நல்லது.
கேப்டன் மில்லர், அயலான் போன்ற ஃபெயிலியர் படங்களுக்கு சக்ஸஸ் மீட் வைக்காத தயாரிப்பாளர்களுக்கு பாராட்டுகள்.
இந்த வருடம் சக்ஸஸ் மீட் கொண்டாடிய ஓடாத படங்கள்:
அரணம், ப்ளூ ஸ்டார், சிங்கப்பூர் சலூன், வடக்குப்பட்டி ராமசாமி, ரணம் “ எனக் குறிப்பிட்டு உள்ளார்.
மலையாளத்தில் வெளியாகி தமிழ் நாட்டில் சக்கப் போடு போட்டு வரும் படங்கள், மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமாலு. இந்த இரண்டு படங்களும் பரபரப்பான வெற்றியை நோக்கிச் செல்கின்றன.
பதிவுகளை உருவாக்குதல். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த இரண்டு படங்களுமே வசூலில் சாதனை படைத்து ஆச்சரியப்பட வைக்கிறது.
மலையாளத்தில் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியான பிரேமாலு இன்னும் பலத்த வசூலைக் காட்டி வருகிறது. பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் ஆக்ரோஷம் காட்டி வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதுவரை இந்த இரண்டு படங்களின் வசூல் என்ன?
மஞ்சும்மல் பாய்ஸ் ரூ.150 கோடி வசூல்
சர்வைவல் த்ரில்லர் படமான மஞ்சும்மல் பாய்ஸ் மாபெரும் வசூல் செய்து வருகிறது. இந்தப் படம் 18 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூல் செய்தது. இதன் மூலம் மலையாளத்தில் அதிக வசூல் செய்த இரண்டாவது படம் என்ற பெருமையை பெற்றது. மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை சிதம்பரம் இயக்கி இருந்தார். சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி எஸ் பொதுவால், தீபக் பரம்போல், அபிராம் ராதாகிருஷ்ணன், அருண் குரியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். இந்த படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைத்து உள்ளார்.
100 கோடி கிளப்பில் பிரேமாலு
காமெடி காதல் படமான பிரேமாலுவும் வசூலில் பறந்து வருகிறது. வெறும் ரூ.4 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படம் தூள் கிளப்புகிறது. கிரீஷ் ஏடி இயக்கி இருக்கும் இப்படத்தில் நெஸ்லென் கே கஃபூர் மற்றும் மமிதா பைஜு கதாநாயகிகளாக நடித்து உள்ளனர்.
31 நாட்களில் பிரேமாலு படம் ரூ.100 கோடி கிளப்பில் நுழைந்து உள்ளது. இப்படம் கேரளாவில் ரூ.53 கோடியும், வெளிநாடுகளில் ரூ.37 கோடியும் வசூலித்து உள்ளது. மீதமுள்ள இடமும் தூசி நிறைந்து காணப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்