Bigg Boss Vikraman: இதைவிட பெரிய வெற்றி என்ன - விக்ரமன் உருக்கம்
உங்கள் வீட்டுப்பிள்ளையா நினைச்சு ஆதரவு கொடுத்திருக்கீங்க. தன்னெழுச்சியாக வந்த அன்புக்கு மிக்க நன்றி என பிக்பாஸ் விக்ரமன் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற விக்ரமன் இதைவிட என்ன பெரிய வெற்றியை தந்து விட முடியும் என்று தனது ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு விக்ரமனின் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்வினையாற்றி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் பிரபலமான விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 6 போட்டியின் இறுதி நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கடும் போட்டிக்கு இடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் சின்ன திரை நடிகர் அசீம் வெற்றி பெற்றார். அவரது வெற்றியானது சமூக வலைத்தளங்களில் பெரிய சர்ச்சையாகி வருகிறது. விக்ரமன் மற்றும் சிவின் இவர்களது ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராகப் பதிவுகளைப் வெளியிட்டு வந்தனர்.
அதே சமயம் கமல்ஹாசன் சமீபத்தில் ராகுல் காந்தி நடைப்பயணத்தில் கலந்து கொண்டார். வரவிருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவிப்பாரா? என்ற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் எழுந்த நிலையில் கமல்ஹாசன் நேதாஜி பிறந்தநாள் குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றைப் போட்டுள்ளார்.
அந்த பதிவில்," அறம் எங்கே செல்லுபடியாகும் என்று யோசித்து, இந்திய விடுதலைப் போரில் மறம் என்கிற ஆயிரத்தை ஏந்தி வீரம் காட்டியவர் நேதாஜி என உயர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள். அவரது 126 ஆவது பிறந்தநாள் அவரது வீரத்தைப் போற்றுவோம்"எனப் பதிவிட்டுள்ளார்.
பிக்பாஸ் விக்ரமனின் ஆதரவாளர்கள் அவர் கூறும் அறம் வெல்லும் என்ற வார்த்தையை இதனோடு கமல்ஹாசன் ட்விட்டர் பதிவோடு ஒப்பிட்டு வைரலாக்கி வந்தனர்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்த விக்ரமன் தன் வீட்டில் இருந்த அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது ஜெய் பீம் என்று குரல் எழுப்பினார். அருகில் இருந்தவர்களும் இணைந்து குரல் எழுப்பினர். இந்நிலையில் இன்று விக்ரமன் தனது ட்விட்டர் பக்கதில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உங்கள் எல்லோருக்கும் மிகப் பெரிய நன்றியை சொல்லி கொள்கிறேன். நீங்கள் எவ்வளவு அன்பும் ஆதரவும் தெரிவித்துள்ளீர்கள் என்பது வீட்டை விட்டு வெளியேறிய பிறகே தெரியவந்தது. அவ்வளவு அன்பும் ஆதரவும் தன்னெழுச்சியாக எதிர்பார்ப்பில்லாமல் காட்டி உள்ளீர்கள். தாய்மார்கள் பொங்கலன்று தாய்மார்கள் வீட்டு வாசலில் போட்ட கோலத்தில் அறம் வெல்லும் என்பதையும் சேர்தே போட்டுள்ளீர்கள் இதைவிட பெரிய வெற்றி எதை கொடுத்து விட முடியும் . நான் உங்கள் எல்லாரையும் சந்திக்க ஆசைப்படுகிறேன். அந்த சந்திப்பு விரைவில் நடக்கும் அது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார். விக்ரமனின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
டாபிக்ஸ்