Bigg Boss 7 Tamil: சந்திரமுகியாக மாறிய வைஷ்ணவி; ஐஸ்வர்யா ராய் எப்பேர் பட்ட நடிகை.. அவர போயி.. - மாயாவை வெளுத்த விசித்ரா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss 7 Tamil: சந்திரமுகியாக மாறிய வைஷ்ணவி; ஐஸ்வர்யா ராய் எப்பேர் பட்ட நடிகை.. அவர போயி.. - மாயாவை வெளுத்த விசித்ரா!

Bigg Boss 7 Tamil: சந்திரமுகியாக மாறிய வைஷ்ணவி; ஐஸ்வர்யா ராய் எப்பேர் பட்ட நடிகை.. அவர போயி.. - மாயாவை வெளுத்த விசித்ரா!

Kalyani Pandiyan S HT Tamil
Dec 14, 2023 02:09 PM IST

ஐஸ்வர்யா என்பவர் கனவு நாயகி. ஐஸ்வர்யா ராய்க்கு உரித்தான லட்சணம், கெட்டப் உள்ளிட்ட சில விஷயங்களை இன்னும் நன்றாக செய்திருந்தால் உன்னுடய நடிப்பு நன்றாக இருந்திருக்கும்.

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 7
பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 7

இதில் மாயா ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ராய் ஏற்று நடித்த வைஷ்ணவி கதாபாத்திரத்தில் நடித்து நடனமாடினார். ஆரம்பத்தில் கிளாசிக்கல் ஸ்டைலில் ஆடிய மாயா, இறுதியில் வெஸ்டன் ஸ்டைலுக்கு வந்து விட்டார். இதனைப்பார்த்த சக போட்டியாளர்கள் வயிறு குலுங்க சிரித்தனர்.

இதனையடுத்து வந்த நாமினேஷன் டாஸ்க்கில் விசித்ரா மாயாவை நாமினேட் செய்வதாக கூறினார். அதற்கு காரணமாக, ஐஸ்வர்யா ராய் மிகப்பெரிய நடிகை. அவரது பேச்சு, நடனம், நளினம் உள்ளிட்டவை அப்படி இருக்கும். 

ஜீன்ஸ் வைஷ்ணவி கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நீ பிராமண பெண்ணுக்கான மொழிநடையை நன்றாக உங்களுடன் பொருத்தி விட்டாய். 

ஐஸ்வர்யா என்பவர் கனவு நாயகி. ஐஸ்வர்யா ராய்க்கு உரித்தான லட்சணம், கெட்டப் உள்ளிட்ட சில விஷயங்களை இன்னும் நன்றாக செய்திருந்தால் உன்னுடய நடிப்பு நன்றாக இருந்திருக்கும்.

 

ஆனால், வெளியில் இருந்து பார்வையாளர்கள் உன்னுடைய நடிப்பை பார்க்கிறார்கள். அப்படி இருக்கும் போது, ஐஸ்வர்யா ராய் அளவிற்கு நடிக்க வில்லை என்றாலும், முடிந்த மட்டும் கொஞ்சமாவது நடிக்க முயற்சி செய்ய வேண்டும். 

ஒரு வேளை, இன்று நீ ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தால், கொஞ்சம் நன்றாக ரெடியாகி நடிக்க வேண்டும் என்றார். அதற்கு மாயா, இன்று நான் அதை செய்ய மாட்டேன் என்று பதிலடி கொடுத்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.