Bigg Boss Tamil: திடீரென்று கைவிட்டு போன வேலை.. 11 ஆண்கள்.. 8 மாதங்கள்.. ஒரே ரூம்.. ஒரே பாத்ரூம்! - பூர்ணிமாவின் கதை!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss Tamil: திடீரென்று கைவிட்டு போன வேலை.. 11 ஆண்கள்.. 8 மாதங்கள்.. ஒரே ரூம்.. ஒரே பாத்ரூம்! - பூர்ணிமாவின் கதை!

Bigg Boss Tamil: திடீரென்று கைவிட்டு போன வேலை.. 11 ஆண்கள்.. 8 மாதங்கள்.. ஒரே ரூம்.. ஒரே பாத்ரூம்! - பூர்ணிமாவின் கதை!

Kalyani Pandiyan S HT Tamil
Nov 25, 2023 03:16 PM IST

பூகம்பம் டாஸ்க்கில், பூர்ணிமா ரவி தன் வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவத்தை ஷேர் செய்திருக்கிறார்.

பூர்ணிமா ரவி!
பூர்ணிமா ரவி!

அதே போல விஷ்ணு, தன் சித்தப்பாவை பற்றி சொன்ன விஷயமும் பார்வையாளர்களை நெகிழ வைத்தது. இந்த நிலையில் பூகம்பம் டாஸ்க்கில், தன்னுடைய வாழ்க்கையில் பூகம்பத்தை உருவாக்கிய விஷயம் குறித்து பூர்ணிமா பேசி இருக்கிறார்.

அவர் பேசும் போது, “ எனக்கு ஏதும் பெரிதாக தெரியாத காலம் அது. நான் ஐடி கம்பெனியில் சேர்ந்து வேலை செய்து கொண்டிருந்தேன். திடீரென்று, எனக்கு வேலை போய்விட்டது. அதே நேரத்தில், என் அண்ணாவிற்கும் வேலை போய்விட்டது. அதனால் நான் என்னையே பார்த்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை வாய்த்தது. வேலை இல்லாத காரணத்தால், அந்த சமயத்தில் டிஜிட்டல் ஊடகத்தளங்களில் சென்று வேலை செய்தேன்.

அதில் நாள் ஒன்றுக்கு 1,500 முதல் 2,000 வரை கிடைக்கும். மாதம் ஆனால், வீட்டிற்கு கல்விக்காக வாங்கிய கடனுக்கான தவணைத்தொகையை அனுப்ப வேண்டும்.  ஆகையால் இந்த வேலைகளுக்கு சென்று, 10,000 சேர்த்து வைத்து அதனை வீட்டிற்கு அனுப்புவேன். 

ஒரு கட்டத்தில் இந்த துறையிலேயே எனக்கு  முழுமையான ஈடுபாடு வந்து விட்டது. சரி, இதையே தொடரலாம் என்று சென்னையில் வீடு தேடினேன். எங்கேயும் வீடு கிடைக்க வில்லை. கடைசியாக 11 ஆண்கள் தங்கியிருந்த ரூமில் ஒரு ஓரமாக நானும் தங்க வேண்டிய சூழ்நிலை உருவானது. அவர்களோடு 8 மாதங்கள் இருந்தேன். 

அந்த 11 ஆண்களும் தங்கம் என்று சொல்வேன். ஆனால், அந்த வீடு அப்படி இல்லை. காரணம் 12 பேருக்கும் சேர்த்து ஒரே பாத்ரூம்தான். அதனால், நான் பார்க்கும் அலுவகத்திற்கே சென்று, அங்கே குளித்து விட்டு வேலைக்கு சென்ற காலம் உண்டு. சம்பவம் ஒன்றில், போலீஸ் விபாச்சாரம் நடப்பதாக கூறி, என்னுடைய வீட்டிற்கு வந்தார்கள். 

ஆனால் அங்கம்பக்கத்தினர் என்னைப் பற்றி நல்ல விதமாக சொல்ல, காவலர்கள் வீட்டிற்கு தகவல் சொல்லி, என்னை அங்கிருந்து செல்ல வைத்தார்கள். அன்று அப்படி இருந்த எனக்கு, இன்று சென்னையில் என்னுடைய பெயரில் வீடு இருக்கிறது” என்றார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.