Bigg Boss Tamil: கமல் சொன்னா கேட்கணுமா.. மீண்டும் தன் வேலையை ஆரம்பித்த பூர்ணிமா, மாயா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss Tamil: கமல் சொன்னா கேட்கணுமா.. மீண்டும் தன் வேலையை ஆரம்பித்த பூர்ணிமா, மாயா

Bigg Boss Tamil: கமல் சொன்னா கேட்கணுமா.. மீண்டும் தன் வேலையை ஆரம்பித்த பூர்ணிமா, மாயா

Aarthi V HT Tamil
Nov 28, 2023 07:50 AM IST

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மீண்டும் மாயா மற்றும் பூர்ணிமா விதிமீறல் செய்து உள்ளனர்.

 பூர்ணிமா, மாயா
பூர்ணிமா, மாயா

குறிப்பாக மாயா, பூர்ணிமா. அவர்கள் இருவரும் சேர்ந்து யாரை என்ன செய்ய வேண்டும், எப்படி சண்டை போடலாம் என சதி திட்டம் திட்டி விளையாடுகிறார்கள்.

பூர்ணிமா முழுக்க முழுக்க மாயாவின் கையில் தான் இருக்கிறார். மாயா, பூர்ணிமாவிடம் மற்றவர்களை பற்றி ஒரு மாய பிம்பத்தை உருவாக்கி அவர்களிடம் அவரஒ மோத விட்டு வேடிக்கை பார்த்து அவர் விளையாட்டை விளையாடிகிறார்.

ஆனால் உண்மையில் அது ஆடியன்ஸுக்கு பிடிக்கவில்லை. இதன் வெளிப்பாடாக பூர்ணிமாவுக்கு எதிராக வார எபிசோட்டில் யாராவது பேசினால் அவர்களுக்கு கைத்தட்டு கிடைக்கிறது. இதை அவரால் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மேலும் வீட்டில் எப்போது விதியை மீறி பூர்ணிமா, மாயா செயல்பட்டு வருகிறார்கள். இதற்கு பல முறை வார்னிங் கொடுத்த பிறகு இருவரும் அதையே செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த வாரம் கமல் ஹாசன் பெயர் குறிப்பிட்டு மைக்கை முடியும், கழட்டி வைத்தும் பேச கூடாது என பூர்ணிமா, மாயாவிற்கு வார்னிங் கொடுத்து இருந்தார்.

ஆனால் அதை எல்லாம் சற்றுக் காதில் வாங்கி கொள்ளலாம், மீண்டும் நேற்று பூர்ணிமா, மாயா விதிமீறல் செய்து உள்ளனர். மைக்கை முடி பூர்ணிமா, மாயா காதில் முனுமுனுத்து பேசி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மாயா ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் பூர்ணிமாவிடம் பேச முழுதாக அந்த வீட்டின் பக்கம் அமர்ந்து பேசி இருக்கிறார்.

இதை எல்லாம் பார்த்த ரசிகர்கள், மைக் பற்றி கமல் ஹாசன் சொல்லியும், மதிகலா கமல் ஹாசனையும் மதிக்கல என குறிப்பிட்டு கலாய்த்து வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் நடந்த பூகம்பம் டாஸ்கில் ஹவுஸ் மேட்ஸ் தோற்றதால் இரண்டு போட்டியாளர்கள் வெளியே சென்றனர், அவர்களுக்கு பதிலாக இரண்டு போட்டியாளர்கள் உள்ளே வந்து இருக்கிறார்கள்.

வைல்ட் கார்டு எண்ட்ரி மூலம் இந்த பிக் பாஸ் வீட்டில் ஏற்கனவே விஜய் வர்மா, அனன்யா உள்ளே நுழைந்து உள்ளனர். புதிய போட்டியாளர்கள் வந்துள்ளதால் யார் எவிக்ட் ஆவார்கள் என பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் அக்‌ஷயா மற்றும் பிராவோ ஆகிய இருவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து, வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.