Top 10 Cinema: கமலுக்கு பதிலாக களமிறங்கும் வில்லன்; சைவ விருந்து கல்யாணம்;சேது செய்த தரமான சம்பவம்! - டாப் 10 சினிமா-bigg boss tamil 8 naga chaitanya engagement maharaja ott kollywood top 10 cinema news today aug 11 2024 in tamil - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top 10 Cinema: கமலுக்கு பதிலாக களமிறங்கும் வில்லன்; சைவ விருந்து கல்யாணம்;சேது செய்த தரமான சம்பவம்! - டாப் 10 சினிமா

Top 10 Cinema: கமலுக்கு பதிலாக களமிறங்கும் வில்லன்; சைவ விருந்து கல்யாணம்;சேது செய்த தரமான சம்பவம்! - டாப் 10 சினிமா

Kalyani Pandiyan S HT Tamil
Aug 11, 2024 11:15 AM IST

Top 10 Cinema: சினிமா வட்டாரத்தில் உலாவும் டாப் 10 சினிமா செய்திகளை இங்கே பார்க்கலாம்.

Top 10 Cinema: கமலுக்கு பதிலாக களமிறங்கும் வில்லன்; சைவ விருந்து கல்யாணம்;சேது செய்த தரமான சம்பவம்! - டாப் 10 சினிமா
Top 10 Cinema: கமலுக்கு பதிலாக களமிறங்கும் வில்லன்; சைவ விருந்து கல்யாணம்;சேது செய்த தரமான சம்பவம்! - டாப் 10 சினிமா
  1. கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பொறுப்பு வகித்த கமல்ஹாசன், அதிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில் அவருக்கு பதிலாக நடிகர் விஜய்சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
  2. இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில்,நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவான மகாராஜா, திரையரங்குகளில் வெளியாகி ரூ. 100 கோடிக்கும் மேலாக வசூலித்து சாதனை படைத்தது. அந்த வெற்றியைத் தொடர்ந்து ஓடிடியிலும் இந்தப்படம், அதிகம் பார்க்கப்பட்ட மூன்றாவது இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை படைத்திருக்கிறது.
  3. நாக சைதன்யா - சோபிதா நிச்சயதார்த்த வைபத்தில் முழுக்க முழுக்க சைவ உணவை விருந்தினர்களுக்கு அளித்திருக்கிறது. நாகார்ஜுனா குடும்பம்.
  4. சூர்யா நடிப்பில், இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின் ட்ரெய்லர் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
  5. மாரிசெல்வராஜ் படைப்புகளின் மீது ரஜினிக்கு எப்போதும் பிரியம் உண்டு. மாமன்னன் திரைப்படத்தை பார்த்து அவர் மாரியை நேரில் அழைத்து பாராட்டினார். இந்த நிலையில், இவர்கள் இணைய இருப்பதாக நெடுநாட்களாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கும் நிலையில், ஒரு வருடம் கழித்து இந்த ஜோடி இணைய இருப்பதாக கூறப்படுகிறது.
  6. சல்மான்கான், ஷாருக்கான், சிரஞ்சீவி உள்ளிட்ட பல பிரபலங்கள் கிராமங்களை தத்தெடுத்து இருக்கிறார்கள். இந்த நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ்பாபுவும் 2 கிராமங்களை தத்தெடுத்து இருக்கிறார்.
  7. பா. ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தங்கலான்' . இந்த படத்தினை ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ளது. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப்படத்திற்கான புரொமோஷனுக்காக படக்குழு பல்வேறு ஊர்களுக்கு பயணப்பட்டுக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில் கேரளாவுக்கும் செல்ல திட்டமிட்டு இருந்தது. ஆனால் அங்கு வயநாட்டு மழைப்பொழிவு காரணமாக சேதமடைந்து பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால், அங்கு ஆகும் புரொமோஷன் செல்வான 5 லட்சத்தை அம்மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி இருக்கிறது.
  8. தங்கலான் படத்திற்கான ஓப்பனிங் காட்சிக்கான முன்பதிவு தொடக்கம் ஆரம்பித்து இருக்கிறது.
  9. தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், அந்தப்படத்தின் வெற்றியைக்கொண்டாடும் நிலையில், தனுஷ் நேற்று பத்திரிகையாளர்களுக்கு விருந்து வைத்தார்.
  10. பிக்பாஸ் மூலம் பிரபலமான அமீர் நடிக்கும் புதிய படமானது பூஜையுடன் தொடங்கப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.