Bigg Boss Raveena: உண்மையா இருந்தாங்களா? ‘அவங்க மனசாட்சிக்குதான் அது தெரியும்’ - குட்டு வைத்து பேசிய ரவீனா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss Raveena: உண்மையா இருந்தாங்களா? ‘அவங்க மனசாட்சிக்குதான் அது தெரியும்’ - குட்டு வைத்து பேசிய ரவீனா!

Bigg Boss Raveena: உண்மையா இருந்தாங்களா? ‘அவங்க மனசாட்சிக்குதான் அது தெரியும்’ - குட்டு வைத்து பேசிய ரவீனா!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 05, 2024 02:36 PM IST

அவர்கள் உண்மையாக இருந்தார்களா இல்லையா என்பது. கேமிற்காக அவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை நிச்சயமாக செய்திருப்பார்கள். அதனால் என்னால் அதை சரிவர சொல்ல முடியவில்லை.

ரவீனா
ரவீனா

அவர் பேசும் போது, “உண்மையில் ஒரு கட்டத்தில் எல்லோரும் அளவுக்கு அதிகமாக உண்மையாக இருந்தார்கள். அதை நம்பவே முடியாமல் இருந்தது. அவரவர் மனசாட்சிக்கு மட்டும்தான் தெரியும். 

அவர்கள் உண்மையாக இருந்தார்களா இல்லையா என்பது. கேமிற்காக அவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை நிச்சயமாக செய்திருப்பார்கள். அதனால் என்னால் அதை சரிவர சொல்ல முடியவில்லை.

உண்மையில் நான் இந்த நிகழ்ச்சியில் மிகவும் ஸ்ட்ராங்கான போட்டியாளராக நினைத்ததை ஜோவிக்காதான் காரணம் என்னவென்றால் ஆரம்பத்தில் அவர் அப்படித்தான் இருந்தார் அவர் சொல்லும் பயன்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு உத்வேகம் தரக்கூடியதாக இருக்கும் ஆனால் எங்கோ ஒரு இடத்தில் அவருக்கு சறுக்கி விட்டது என்று நான் நினைக்கிறேன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியானது, நம் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் வாங்கும் அடிகளை ஒரே இடத்தில் நமக்கு அது தரும். நிறைய வாழ்க்கை பாடங்களை நான் கற்றுக் கொண்டேன். 

நம்முடைய வாழ்க்கையில் நமக்கு நடக்கும் எல்லாவற்றிற்கும் நாம் தான் காரணம். ஏதாவது நமக்கு நல்லது நடந்தால் அதற்கும் நாம் தான் காரணம் அதேபோல கெட்டது நடந்தாலும், அதற்கும் நாம் தான் காரணம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் எனக்கு விஷ்ணு, கூல் சுரேஷ் ஆகியோரை மிகவும் பிடிக்கும். மாயா அக்காவின் திறமையை நான் மிகவும் மதிக்கிறேன். பூர்ணிமா எப்படியானவர் என்பது பற்றி எனக்கு தெரியவில்லை? ஆனால் என்னிடம் அவர் மிகவும் நன்றாக இருந்தார். இதே போல எல்லோரையும் எனக்கு பிடிக்கும்.

குக் வித் கோமாளியின் சீசன் 5 -ல்  நான் கலந்து கொள்வேனா என்று எனக்கு தெரியவில்லை. காரணம் குக் வித் கோமாளியின் அடுத்த சீசன் சீக்கிரமே தொடங்க இருக்கிறது. 

அதனால் நான் அதில் இல்லை என்று தான் நினைக்கிறேன். நான் ஜோடி நிகழ்ச்சியில் வேறு பங்கு பெற்று இருக்கிறேன். அதனால் அங்கு செல்ல முடியாது என்று நினைக்கிறேன். என்னை கூப்பிடவும் இல்லை.  

பிக் பாஸ் வீட்டில் அதிகமாக நான் மிஸ் செய்வது பிக்பாஸ் அவர்களின் குரலைதான்” என்று பேசினார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.