Archana: இரவு 2 மணிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் - கதறி அழுதபடி பெற்றோரிடம் ஓடிய அர்ச்சனா?-bigg boss archana shares horror incident she faced in night shoot - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Archana: இரவு 2 மணிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் - கதறி அழுதபடி பெற்றோரிடம் ஓடிய அர்ச்சனா?

Archana: இரவு 2 மணிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் - கதறி அழுதபடி பெற்றோரிடம் ஓடிய அர்ச்சனா?

Aarthi Balaji HT Tamil
Aug 14, 2024 06:16 AM IST

Archana: அர்ச்சனா பொதுவாகவே மிகவும் பயம் கொண்ட ஒருவராம். வீட்டில் தூங்கும் போது கூட கடைசியாக லைட் ஆப் செய்வதற்கு கூட பயப்படுவாராம். ஆப் செய்துவிட்டு வேகமாக ரூமுக்கு சென்று போர்வையை போர்த்தி தூங்குவாராம்.

இரவு 2 மணிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் - கதறி அழுதபடி பெற்றோரிடம் ஓடிய அர்ச்சனா?
இரவு 2 மணிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் - கதறி அழுதபடி பெற்றோரிடம் ஓடிய அர்ச்சனா?

25 வயதான அர்ச்சனா ரவிச்சந்திரன், டைனமிக் என்ற நிகழ்ச்சியில் சன் டிவியில் வீடியோ ஜாக்கியாக தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினார். அவர் தனது துடிப்பான ஆளுமையை அதில் வெளிப்படுத்தினார். அதனால் ரசிகர்கள் அவரை விரும்ப ஆரம்பித்தார்கள்.

பன்முகத் திறன்

அவரது ஆரம்ப நாட்களில், அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் தோன்றி பார்வையாளர்களை கவர்ந்தார். அடுத்த கட்டமாக அவர் குறிப்பாக ' ராஜா ராணி 2 ' இல் பங்கேற்றார். விஜய் டெலிவிஷனின் ' முரட்டு சிங்கிள்ஸ் ' நிகழ்ச்சியையும் அவர் தொகுத்து வழங்கிய காரணத்தினால் அவரது பன்முகத் திறன் பிரகாசித்தது.

மேலும் பொழுதுபோக்கு துறையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அர்ச்சனா, விஜய் தொலைக்காட்சியின் ' காமெடி ராஜா கலக்கல் ராணி ' மற்றும் ஜீ டிவியின் ' இந்திரா ' ஆகியவற்றில் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்வித்தார். ' டிமான்டே காலனி 2 ' படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அர்ச்சனா ரவிச்சந்திரனின் பயணம் அவரது பன்முக திறமை மற்றும் பொழுதுபோக்கு துறையில் வளர்ந்து வரும் முக்கியத்துவத்திற்கு ஒரு சான்றாகும்.

கோலிவுட்டில் புதிய வாய்ப்பு

இந்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு கோலிவுட்டில் புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த நேரம் சரியாக யோசித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அர்ச்சனா பொதுவாகவே மிகவும் பயம் கொண்ட ஒருவராம். வீட்டில் தூங்கும் போது கூட கடைசியாக லைட் ஆப் செய்வதற்கு கூட பயப்படுவாராம். ஆப் செய்துவிட்டு வேகமாக ரூமுக்கு சென்று போர்வையை போர்த்தி தூங்குவாராம். இப்படி, பயப்படும் அர்ச்சனாவுக்கு இரவு 2 மணிக்கு அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

இரவு 2 மணிக்கு

அவர் கூறுகையில், “ சீரியலில் நடித்து கொண்டு இருந்த சமயத்தில் இரவு நேரங்களில் படப்பிடிப்புகள் நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும் அல்லவா. அப்படி தான் ஒரு முறை இரவு நேரத்தில் படப்பிடிப்பு ஒன்றை முடித்துவிட்டு சென்னையில் இரவு 2 மணிக்கு காரில் சென்று கொண்டு இருந்தேன். 

அப்போது சாலைக்கு அருகே யாரோ ஒருவர் நின்று கொண்டு இருந்தது போல் இருந்தது. இந்த நேரத்தில் யார் இங்கு நிற்கப்போகிறார் என்ற பயத்துடன் வந்தேன். திடிரேன அந்த உருவம் காரில் என்னை பின்தொடர்ந்து வந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நான் மிகவும் வேகமாக காரை ஒட்டி சென்றுவிட்டேன். 

ஆறுதல் சொன்ன பெற்றோர்

வீட்டிற்கு சென்று நான் இனிமேல் இரவு படப்பிடிப்பு போகமாட்டேன். நான் பேயை பார்த்துவிட்டேன் என பெற்றோரிடம் சொல்லி அழுதேன். இல்லை நீ சரியாக தூங்கவில்லை தவறாக அப்படி நினைத்து கொண்டாய் என என்னை சமாதனம் செய்தார்கள் “ என்றார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.