தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Bigg Boss 7 Tamil Who Took Money Box And Came Out

Bigg Boss 7 Tamil: பிக் பாஸ் வீட்டில் இருந்து பணப்பெட்டியுடன் வெளியேறியது யார்?

Aarthi V HT Tamil
Jan 03, 2024 11:49 AM IST

பிக் பாஸ் வீட்டில் இருந்து பணப்பெட்டியுடன் வெளியேறியது யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் தமிழ் 7
பிக் பாஸ் தமிழ் 7

ட்ரெண்டிங் செய்திகள்

பிக் பாஸ் தமிழ் 7 சமீபத்தில் இரட்டை எலிமினேஷனைக் கண்டது. இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 3 ஆவது வாரத்தில் நிக்சன் மற்றும் ரவீனா தாஹா வெளியேற்றப்பட்டனர்.

புத்தாண்டில் 14 ஆவது வாரத்தில் நிகழ்ச்சி தொடங்கியுள்ளதால், இந்த வாரம் பிக் பாஸ் தமிழ் 7 இன் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டை வென்ற விஷ்ணுவைத் தவிர அனைத்து போட்டியாளர்களும் எலிமினேஷனுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர்.

நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பதால் வழக்கம் போல் பணப்பெட்டி டாஸ்க் வழங்கப்பட்டது. ஆரம்ப விலையாக ரூ.1 லட்சம் வைக்கப்பட்டது. அதை யாரும் எடுக்காத காரணத்தினால் விலை ஏறிக் கொண்டே இருக்கிறது. ஆனால் போட்டியாளர்கள் நான், நீ என போட்டி போடாமல் யாரும் அதை எடுக்க நினைக்கவில்லை. 

இந்நிலையில் இந்த முறை பணப்பெட்டி ரூ.13 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இதனிடையே விசித்ரா 13 லட்சம் ரூபாய்க்கான பணப்பெட்டியை எடுத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக சொல்லப்படுகிறது. இவரின் முடிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கமெண்ட்கள் வந்த வண்ணம் உள்ளன.

வழக்கமாக வயதில் மூத்த நபர்கள் 1 முதல் 2 வாரத்தில் எலிமினேட் செய்து அனுப்பிவிடுவார்கள். ஆனால் இந்த முறை தான் மூத்த நபரான விசித்ரா 94 நாட்கள் வரை பிக் பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்து உள்ளார். இளம் போட்டியாளர்களுக்கு பல சமயங்களில் அவர் டஃப் கொடுக்கும் போட்டியாளராகவே இருந்து இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9  

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.