Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த கெட்ட கனவு; ‘அர்ச்சனாவ வெளியே கூட்டிட்டு வந்துறலாம்னு ஆனா’- எமோஷனல் பேட்டி-bigg boss 7 tamil title winner archana ravichandran latest interview about her father and kamalhassan bigg boss journey - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த கெட்ட கனவு; ‘அர்ச்சனாவ வெளியே கூட்டிட்டு வந்துறலாம்னு ஆனா’- எமோஷனல் பேட்டி

Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த கெட்ட கனவு; ‘அர்ச்சனாவ வெளியே கூட்டிட்டு வந்துறலாம்னு ஆனா’- எமோஷனல் பேட்டி

Kalyani Pandiyan S HT Tamil
Mar 16, 2024 06:21 AM IST

அர்ச்சனா பல பேட்டிகளில் நான் அவளை மிகவும் ஸ்ட்ரிக்ட்டாக வளர்த்து விட்டேன். அதனால் அவருக்கு பெரிதாக நினைவுகள் கிடைக்கவில்லை என்று சொல்லி இருக்கிறார். அதற்கான பதிலை அவரிடம் இருந்தே கேட்க விரும்புகிறேன்

அர்ச்சனா பேட்டி!
அர்ச்சனா பேட்டி!

அர்ச்சனாவின் அப்பா பேசும் போது, “என்னைப் பொறுத்தவரை ஒரு பெண் அவள் தன்னுடைய சொந்த காலில் நிற்கும் வரை, கல்யாணத்தைப் பற்றி நினைக்க கூடாது. ஆனால் அர்ச்சனா, பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்று, நான் சொன்னதை விடவும் அதிகமாக சாதித்துக் காட்டிவிட்டார். 

நிகழ்ச்சிக்குள் அர்ச்சனா முதலில் அழும் பொழுது, பிக்பாஸ் நிகழ்ச்சியின் தலைவரிடம் சென்று என்னுடைய மகளை தயவு செய்து வெளியே அனுப்பி விடுங்கள் என்று சொல்ல நினைத்தேன். ஆனால் சில நாட்களில் அர்ச்சனா திருப்பி பேசும் பொழுது, எனக்கு பிரமிப்புதான் உண்டானது. காரணம், அர்ச்சனா அப்போது பேசும் போது, ஒரு இடத்தில் கூட தவறான வார்த்தையை பயன்படுத்த வில்லை.” என்று பேசினார். 

மேலும் அவர் பேசும் போது, “அர்ச்சனா பல பேட்டிகளில் நான் அவளை மிகவும் ஸ்ட்ரிக்ட்டாக வளர்த்து விட்டேன். அதனால் அவருக்கு பெரிதாக நினைவுகள் கிடைக்கவில்லை என்று சொல்லி இருக்கிறார். அதற்கான பதிலை அவரிடம் இருந்தே கேட்க விரும்புகிறேன்” என்றார். 

அதற்கு பதில் அளித்த அர்ச்சனா, “ சிறு வயதில் நண்பர்கள் எங்காவது வெளியே செல்லும் பொழுது, என்னையும் அழைப்பார்கள். ஆனால் அப்பா அதற்கு அனுமதிக்க மாட்டார். ஆனால் வெளியே சென்ற நண்பர்கள் ஒருவருக்கொருவர் அவர்களை நன்றாக புரிந்து கொண்டு திரும்பி வரும் போது மிகவும் நெருக்கமாகி விடுவார்கள். 

ஆனால் எனக்கு அந்த நெருக்கமானது இல்லாமல் போனது. இதனால் எனக்கு பெரிதாக நண்பர்கள் வட்டம் உருவாகவில்லை இதைத்தான் அவ்வப்போது பேட்டிகளில் சொன்னேன். 

என்னுடைய அப்பா முகம் சிறிது மாறினால் கூட என்னால் அதை தாங்க முடியாது. சில சமயங்களில் எனக்கே தோன்றும்…என்ன நம்முடைய அப்பா எதற்கெடுத்தாலும் அட்வைஸ் செய்து கொண்டு இருக்கிறாரே என்று... ஆனால் பின்னாளில்தான் அந்த அட்வைஸுக்கான உண்மையான காரணம் ஒவ்வொன்றாய் புரிய ஆரம்பித்தது. 

பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பொழுது அப்பாவை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்றுதான் யோசித்து கொண்டு இருந்தேன். காரணம் உள்ளே இருக்கும் போது எனக்கு ஒரு கெட்ட கனவு வந்தது. 

இதனையடுத்துதான் நான் கேமரா முன்னால் நின்று, என்னுடைய குடும்பத்தில் அம்மா, அப்பா எல்லோரும் நன்றாக இருக்கிறார்களா என்று கேட்டேன். என்னுடைய அப்பா எல்லா விஷயத்திலும் மிக மிக க்ளீனாக இருப்பார். நான் வீட்டில் இருக்கும் பொழுது அப்படியெல்லாம் இருப்பது இல்லை. 

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் இருக்கும் போது, என்னுடைய அப்பா எப்படி வெளியே இருக்கிறாரோ… அப்படியே நான் உள்ளே நடந்து கொண்டேன். அதை என்னால் பார்க்க முடிந்தது.” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.