Bigg Boss Promo: வெளியே தள்ளப்படும் ஹவுஸ் மேட்ஸ்..மீண்டும் களமிறங்கும் வைல்டு கார்டு போட்டியாளர்கள்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss Promo: வெளியே தள்ளப்படும் ஹவுஸ் மேட்ஸ்..மீண்டும் களமிறங்கும் வைல்டு கார்டு போட்டியாளர்கள்!

Bigg Boss Promo: வெளியே தள்ளப்படும் ஹவுஸ் மேட்ஸ்..மீண்டும் களமிறங்கும் வைல்டு கார்டு போட்டியாளர்கள்!

Aarthi V HT Tamil
Nov 20, 2023 10:08 AM IST

பிக் பாஸ் 7 ஆவது சீசனுக்கான இன்றைய ( நவ. 20) ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் 7
பிக் பாஸ் 7

தினேஷ், அர்ச்சனா, கானா பாலா, அன்னா பாரதி, பிரவோ ஆகியோர் வந்தனர். இதில் அன்னா பாரதி மற்றும் கானா பாலா ஆகியோர் குறைவான வாக்குகள் பெற்றனர் என்ற அடிப்படையில் வெளியேறி இருக்கிறார்கள்.

இந்நிலையில் பிக் பாஸ் 7 ஆவது சீசனுக்கான இன்றைய ( நவ. 20) ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

ஏற்கனவே ஐந்து வைல்ட் கார்டு போட்டியாளர்கள் வந்த நிலையில் இரண்டு நபர்கள் எவிக்டாகி சென்று உள்ளனர்.

இப்படி இருக்கும் நிலையில் இன்று ( நவ. 20 ) மேலும் மூன்று பேர் களமிறங்க போகிறார்கள். வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதிலும் பிக் பாஸ் அவர்களுக்கு ஒரு சவாலை கொடுத்து இருக்கிறார். இந்த வாரத்தில் இருந்து டாஸ்க்குகள் கடுமையாக கொடுக்கப்பட உள்ளது. அதில் வெற்றி காண்பவர்கள் தான் விளையாட்டை தொடர முடியும்.

தோல்வி அடைப்பவர்கள் புதியதாக வரும் வைல்டு கார்டு போட்டியாளர்களுக்கு வழி கொடுத்து விட்டு வெளியேற வேண்டும். இதனால் போட்டியாளர்கள் வெற்றி அடைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து யார் அந்த புது வரவுகள் என இணையத்தில் ரசிகர்கள் தேட ஆரம்பித்து இருக்கிறார்கள்.

மேலும் இதை பார்த்த ரசிகர்கள் நிச்சயமாக புல்லி கேங்கில் இருந்து யாராவது ஒருவராக வெளியேற வேண்டும் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.