Bigg Boss 7 Tamil Elimination: மீண்டும் காப்பாற்றப்பட்ட மாயா.. இந்த வாரம் இவர் தான் எவிக்ட்
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் யார் வெளியே செல்கிறார் என பார்க்கலாம்.

பிக் பாஸ் 7
பிக் பாஸ் தமிழ் 7 அதன் கடைசி கட்டத்தில் உள்ளது. இதனால் போட்டியாளர்களிடையே சண்டை சச்ரவுகள் குறைந்து இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய திருப்பத்துடன் வருகிறது, மேலும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் விளையாட்டு தீவிரமடைந்து வருகிறது.
பிரபலமான பிக் பாஸ் 7ஆவது சீசன் இப்போது 14 வது வாரத்தில் உள்ளது மற்றும் தயாரிப்பாளர்கள் சமீபத்தில் ரூ 1 லட்சம் தொடக்கத் தொகையுடன் கேஷ் பாக்ஸ் திருப்பத்தை அறிவித்தனர்.
ரொக்கப் பெட்டியானது போட்டியாளர்களுக்குப் பெட்டியில் இருந்த பணத் தொகையுடன் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்பளித்தது. மூன்று நாட்களாக யாரும் எடுக்காமல் இருந்த நிலையில் இறுதியாக பூர்ணிமா ரவி கேஷ் பாக்ஸ் தொகையான ரூ. 16 லட்சத்துடன் விளையாட்டை விட்டு வெளியேற முடிவு செய்தார்.