Bigg boss 6 tamil: போட்டியாளர்களின் பாராட்டுகளை பெற்ற அசீம்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைக்கான முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 60 நாட்கள் கடந்துள்ளது. முதலாவதாக ஜிபி முத்து நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக வீட்டை விட்டு வெளியேறினார்.
அடுத்ததாக டான்ஸ் மாஸ்டர் சாந்தி வெளியேற அடுத்த வாரங்களில் தொடர்ந்து அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மற்றும் குயின்சி ஆகியோர் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர். மீதம் 13 நபர்கள் தற்போது விளையாடி வருகின்றனர்.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் கதாபாத்திரங்கள் கொடுத்து அந்த கதாபாத்திரங்களவே போலவே மாறி தங்களது திறமைகளை வெளிபடுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று பிக் பாஸ் வீட்டில் 60 ஆவது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை வெளியாகியுள்ளது.
அதில் டிவிங்கிள் டிவிங்கிள் பெரிய ஸ்டார்... நீங்களும் ஆகலாம் மக்களின் ஸ்டார் டாஸ்க்கில் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களும் போட்டி போட்டு அதில் சிறந்த போட்டியாளர்கள் 5 பேர் தேர்வு செய்ய வேண்டும்.
தேர்வான 5 பேர் மட்டும் பிக் பாஸ் வீட்டில் நடக்க உள்ள பிரமாண்ட கலை நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று பிக்பாஸ் கூறிகிறார்.
அதில் அசீம் சிவாஜியாக நடிப்பதை பார்த்து மற்ற ஹவுஸ் மேட்ஸ்கள் அவரை வெகுவாக பாராட்டுகின்றனர்.
டாபிக்ஸ்