Bigg boss 6 tamil: காரி துப்பி கொடுப்பேன் சாப்பிடுவியா - விக்ரமனை சீண்டிய அசீம்
பிக் பாஸ் சீசன் 6யின் இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் நேற்று போட்டியாளர்களுக்கு இந்த வாரத்திற்கான டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் 3 அணிகளாக பிரிந்தனர்.
ராஜ வம்ச அணியில் ராஜாவாக ராபர்ட், ராணியாக ரக்ஷிதா, இளவரசராக மணிகண்டன், இளவரசியாக ஜனனி, ராஜ குருவாக விக்ரமன் மற்றும் தளபதியாக அசீம் தேர்வு செய்யப்பட்டனர்.
மியூசியம் கார்ட்ஸ் ஏடிகே, ஆயிஷா, தனலட்சுமி, குயின்சி மற்றும் நிவா தேர்வு செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து சேவகர்களாக ஷிவின், கதிரவன், அமுதவாணன் மற்றும் மைனா தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ராஜகுருவாக இருக்கும் விக்ரமனை பார்த்து படைத்தளபதியான அசீம், ‘உங்கள் சாப்பாட்டில் காரித்துப்பி கொடுத்தால் நீங்கள் சாப்பிடுவீர்களா? என கேட்டார். இதனால் கடுப்பான விக்ரமன், ‘ஏய் இப்படியெல்லாம் பேசாதிங்க என்றார்.
உடனே விக்ரமனை நோக்கி அசீம், ‘யாருடா நீ என்ன பார்த்தே ஏய் என்று பேசுகிறாய் என ஒருமையில் பேசினார். இவர்களை மற்ற போட்டியாளர்கள் சமாதனம் செய்கின்றனர்.
டாபிக்ஸ்