Dhanalakshmi Salary: பிக் பாஸ் தனலட்சுமி வாங்கிய சம்பளம் என்ன?
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய தனலட்சுமியின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸின் நேற்றைய எபிசோடில் மைனா, அசிம் மற்றும் தனலட்சுமி எலிமினேட் பட்டியலில் இருந்தனர். இவர்களில் யார் வெளியேறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இதனிடையே பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தொடர்ந்து 3 ஆவது வாரமாக பெண் போட்டியாளர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். கடந்த வாரம் மக்களிடம் குறைவான வாக்குகள் பெற்று தனலட்சுமி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
டிக் டாக் பிரபலமான தனலட்சுமி கடும் முயற்சிகளுக்கு இடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். தனலட்சுமிக்கு இந்த ஷோவில் வாய்ப்பு கிடைத்த நிலையில் அவரின் நெருக்கமான நபர்கள் அவர் குறித்து பேட்டி அளித்தனர்.
அசீமுக்கு இணையாக முதல் வாரத்தில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கன்டென்ட் கொடுத்து வந்தவர் தனலட்சுமி. அவர் இந்த வாரம் வெளியேற்றப்பட்டது கடைசி நேர மோசடி என ரசிகர்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
தனலட்சுமி வெளியே போனது நல்லது தான். சும்மா பிக் பாஸ் வீட்டில் கத்தி கத்தியே விளையாடுகிறார் என பலரும் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.
தனலட்சுமி சம்பளம்
தனலட்சுமி பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளில் இருந்து 76 நாட்கள் இருந்து உள்ளார். வாரத்திற்கு 11 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் மொத்தமாக 11 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வரை அவருக்கு சம்பளமாக கிடைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்னும் கொஞ்சம் நாள் இருந்து இருந்தால் பிக் பாஸ் வீட்டில் கடைசியாக பணப் பெட்டியை அவர் எடுத்து சென்று இருப்பார் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
பிக் பாஸ் தனலட்சுமி
தனலட்சுமி வெளியேறிய நிலையில் அவர் குறித்து அசீம் , “ இனி நீ பிக் பாஸ் தனலட்சுமி தான். யாரேனும் பிக் பாஸ் வீட்டில் இருந்து நீ என்ன எடுத்துகிட்டு வந்த? என கேட்டால், “பிக் பாஸ் என்னும் டைட்டிலை எடுத்து கொண்டு வந்து இருக்கிறேன் என சொல்லலாம்” என மோட்டிவேட் செய்தார்.
டாபிக்ஸ்