Bayilvan: நடிகருடன் பேச்சு.. மனைவி மேல் வந்த சந்தேகம் - ஜெயம் ரவி விவாகரத்திற்கு இதுவும் காரணமா? - பயில்வான் குண்டு-bayilvan says jayam ravi wife aarthi was talking with hero and that may be the reason for divorce - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bayilvan: நடிகருடன் பேச்சு.. மனைவி மேல் வந்த சந்தேகம் - ஜெயம் ரவி விவாகரத்திற்கு இதுவும் காரணமா? - பயில்வான் குண்டு

Bayilvan: நடிகருடன் பேச்சு.. மனைவி மேல் வந்த சந்தேகம் - ஜெயம் ரவி விவாகரத்திற்கு இதுவும் காரணமா? - பயில்வான் குண்டு

Aarthi Balaji HT Tamil
Sep 14, 2024 07:17 AM IST

Bayilvan: ஆர்த்தி அழகாக இருக்கும் நபர். அவரை நடிக்க வைக்க நிறைய இயக்குநர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால் ஆர்த்தி நடிக்க மறுத்துவிட்டார். அவர் அழகு தான் ஜெயம் ரவிக்கு வந்த சந்தேகம் என்றார் பயில்வான்.

Bayilvan: நடிகருடன் பேச்சு.. மனைவி மேல் வந்த சந்தேகம் - ஜெயம் ரவி விவாகரத்திற்கு இதுவும் காரணமா? - பயில்வான் குண்டு
Bayilvan: நடிகருடன் பேச்சு.. மனைவி மேல் வந்த சந்தேகம் - ஜெயம் ரவி விவாகரத்திற்கு இதுவும் காரணமா? - பயில்வான் குண்டு

இந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய மனைவியான ஆர்த்தியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரைத் துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடகத் துறை மற்றும் சமுக ஊடக நண்பர்கள், தன் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

கடினமான முடிவு

நீண்ட கால யோசனை மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல. என்னை சார்ந்தவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், அவர்களின் நல்வாழ்வுக்காக எடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டு கொள்கிறேன் “ என்றார்.

அதற்கு பிறகு தனக்கு தெரியாமல் விவாகரத்து செய்தியை ஜெயம் ரவி அறிவித்து இருக்கிறார் என்று ஆர்த்தி தனி அறிக்கை ஒன்றை வெளியீட்டார்.

இது தொடர்பாக சினிமா மூத்த பத்திகையாளர் பயில்வான் ரங்கநாதன், Metro Mail என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார்.

பயில்வான் பேட்டி

அதில், “ ஜெயம் ரவியை வைத்து அவரின் மாமியார் படம் எடுத்தார். 7, 8 படங்கள் சரியாக போகவில்லை. அடுத்த படத்தில் நடிக்க ஜெயம் ரவி அதிகமாக சம்பளம் கேட்டு உள்ளார். ஆனால் இப்போது இருக்கும் உங்கள் மார்கெட் குறைவாக இருப்பதால் சம்பளம் அவ்வளவு தர முடியாது என சொல்லி இருக்கிறார். இதனால் இரண்டு உறவுகளில் விரிசல் ஏற்பட்டது.

ஆர்த்தியின் அம்மாவிடம் நான் பேசினேன். அவர், நேரடியாக என்னிடம் சில விஷயங்களை சொல்லினார். அவங்க இரண்டு பேரும் சண்டை போடுவது சாதராணமான ஒன்று தான். சென்னை வீட்டில் தாங்கவில்லை. கடற்கரை சாலையில் உள்ள ஹோட்டலில் தான் தங்கினார் என்றார் அவரின் அம்மா.

எதற்கு என் மனைவியிடம் பேச்சு

ஆர்த்தி அழகாக இருக்கும் நபர். அவரை நடிக்க வைக்க நிறைய இயக்குநர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால் ஆர்த்தி நடிக்க மறுத்துவிட்டார். அவர் அழகு தான் ஜெயம் ரவிக்கு வந்த சந்தேகம். ஒரு நடிகருடன், ஆர்த்தி கூட பேச ஆரம்பித்தார்.

அதை ஜெயம் ரவி பார்த்து இருக்கிறார். அந்த நடிகரிடம், எதற்கு என் மனைவியிடம் பேச்சு என கேட்டதற்கு அவர், உன் மனைவியிடம் சென்று கேட்டுகொள் என்று சொல்லி அனுப்பி இருக்கிறார். பிறகு கணவன், மனைவி அதை பேசி சரி செய்து கொண்டார்கள் “ என்றார்.

பொறுப்பு துறப்பு

இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.