தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bayilvan Ranganathan: மெய் மறந்து கொடுத்த முத்தம்.. இயக்குநர் கட் சொல்லியும் காதில் வாங்கி கொள்ளாத சிம்பு, த்ரிஷா?

Bayilvan Ranganathan: மெய் மறந்து கொடுத்த முத்தம்.. இயக்குநர் கட் சொல்லியும் காதில் வாங்கி கொள்ளாத சிம்பு, த்ரிஷா?

Aarthi Balaji HT Tamil
May 20, 2024 07:14 AM IST

Bayilvan Ranganathan: சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் பயில்வான் ரங்கநாதன், சிம்பு குறித்து பழைய விஷயத்தை பேசி தற்போது இணையத்தில் பகீர் கிளப்பி உள்ளார்.

Bayilvan Ranganathan: மெய் மறந்து கொடுத்த முத்தம்.. இயக்குநர் கட் சொல்லியும் காதில் வாங்கி கொள்ளாத சிம்பு, த்ரிஷா?
Bayilvan Ranganathan: மெய் மறந்து கொடுத்த முத்தம்.. இயக்குநர் கட் சொல்லியும் காதில் வாங்கி கொள்ளாத சிம்பு, த்ரிஷா?

ட்ரெண்டிங் செய்திகள்

நடிகரும், சினிமாவின் மூத்த பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகை, நடிகர்கள் பற்றி பல அந்தரங்கமான விஷயத்தை யூடியூப் சேனலில் பேசி வருகிறார். இதற்கு பலரும் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள்.  

இதனிடையே சமீபத்தில் அளித்த பேட்டியில், முத்த காட்சி ஒன்றில் இயக்குநர் கட் சொல்லியும் நடிகர் சிம்பு, நடிகை த்ரிஷாவிற்கு தன்னையே மறந்து முத்தம் கொடுத்ததாக பயில்வான் ரங்கநாதன் பகீர் கிளப்பும் பேட்டி கொடுத்து இருக்கிறார்.

விண்ணைத் தாண்டி வருவாயா

தமிழ் சினிமாவில் திருமண வயதை எட்டியும் திருமணமாகாத நடிகர்கள் சிம்புவும், த்ரிஷாவும். விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் மூலம் இவர்களின் கெமிஸ்ட்ரி கவனிக்கப்பட்டது. இந்தப் படம் சிம்புவின் திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இப்படம் சிறந்த காதல் படமாக இன்றும் பிரபலமாக உள்ளது.

இந்தப் படத்தில் நடித்ததில் இருந்தே சிம்புவுக்கும், த்ரிஷாவுக்கும் இடையே காதல் என்று கிசுகிசுக்கள் வந்தன. அவர்கள் இன்னும் திருமணம் செய்து கொள்ளாததற்கு இதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

பயில்வான் ரங்கநாதன் பகீர் கிளப்பிய பேட்டி

சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில்  பயில்வான் ரங்கநாதன், சிம்பு குறித்து பழைய விஷயத்தை பேசி தற்போது இணையத்தில் பகீர் கிளப்பினார்.

அவர் கூறுகையில், ” விண்ணைத்தாண்டி வருவாயா படம் அருமையான காதல் படம். இந்த படத்தில் சிம்பு, த்ரிஷாவின் ரொமான்ஸ் மற்றும் கெமிஸ்டிரி பக்காவாக இருந்தது. 

சிம்பு, த்ரிஷா முத்தம்

சிம்புவின் திரை பயணத்தில் விண்ணைத்தாண்டி வருவதாய ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. இந்த படத்தில் பல முத்தக்காட்சிகள் வரும், இந்த காட்சி படமாக்கப்பட்ட போது இயக்குநர் கௌதம் மேனன் கட் சொன்னார். 

ஆனால், தன்னையே மறந்து போன சிம்பு, த்ரிஷாவிற்கு தொடர்ந்து முத்தம் கொடுத்து கொண்டே இருந்தார். சிம்பு கொடுத்த முத்தத்தை மறுக்க முடியாமல் நடிகை த்ரிஷாவும் அமைதியாக நின்றார் “ என்றார்.  

கடுப்பான சிம்பு ரசிகர்கள்

பயில்வான் ரங்கநாதனின் சர்ச்சை பேச்சு தற்போது இணையத்தில் கடும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. சிம்பு ரசிகர்கள், பயில்வான் ரங்கநாதன் ஏன் தேவையில்லாத பழைய கதையை பேசி அடுத்தவரின் வாழ்க்கையில் இப்படி செய்கிறார் என கடும் கோபத்தில் இருக்கிறார்கள். 

இதே போல் ஜி.வி.பிரகாஷ் விவாகரத்து தொடர்பாகவும் பயில்வான் ரங்கநாதன் பேட்டி கொடுத்து இருக்கிறார்.

குறிப்பு: இது பயில்வானின் சொந்த கருத்து. இதற்கும் எங்கள் நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்